May 5, 2024

அன்று காமெடியன் இன்று கதாநாயகன் ..!! படிப்படியாக மேலே வந்த சூரியின் அழகிய குடும்ப புகைப்படங்கள் ..!!

சூரி ஓர் பிரபலமான தமிழ் திரைப்பட காமெடி நடிகர் மற்றும் ஹீரோ ஆவார் . ஆரம்பத்தில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்த சூரி கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியான வெண்ணிலா கபடி குழு என்ற படத்தின் மூலம் காமெடியனாக அறிமுகமானார்.  இந்த படத்தில் இவர் 50 புரோட்டா சாப்பிடும் காட்சியை இப்போதும் யாரும் மறந்து இருக்க மாட்டார்கள் . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து களவாணி,

குள்ளநரி கூட்டம் ,மனம் கொத்திப் பறவை ,சுந்தரபாண்டியன் ,கேடி பில்லா கில்லாடி ரங்கா ,வருத்தப்படாத வாலிபர் சங்கம், தேசிங்கு ராஜா போன்ற பல சூப்பர் ஹிட் படங்களில் காமெடி நடிகராக நடித்து தமிழ் ரசிகர்களிடையே  தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டார்.

இப்படி காமெடி நடிகராக கலக்கி கொண்டு வந்த சூரி கடந்த வருடம் வெற்றி மாறன் இயக்கத்தில் வெளியான விடுதலை என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார் . இப்படி வெளியான திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய அங்கீகாரத்தை பெற்றுத்தந்தது . இதை அடுத்து,

தற்போது ஹீரோவாக இரண்டு திரைப்படங்களில் கமிட் டாகி நடித்துக் கொண்டு வருகிறார் சூரி . மேலும் நடிகர் சூரிக்கு திருமணமாகி ஒரு மகள் ,ஒரு மகன் உள்ளனர். இந்நிலையில் பலரும் பார்த்திடாத சூரியின் குடும்ப புகைப்படங்கள் இணையத்தை கலக்கி கொண்டு வருகிறது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *