April 27, 2024

40 வ யசு ஆகி டு ச்சு ..!! இனி மே ல் என் னால் “இதை யெல் லாம்” செய் ய முடி யா து ..!! ஒரேடி யாக கும் பிடு போ ட்ட த னுஷ் ..!! என் ன இ வரே இப்ப டி சொல்லி ட் டாரு ..??

தற்போது தமிழ் சினிமாவையும் தாண்டி மற்ற மொழி படங்களிலும் கலக்கிக் கொண்டு வருபவர் தான் நடிகர் தனுஷ் . தற்போது இவர் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் கேப்டன் மில்லர் என்ற படத்தில் நடித்துக்கொண்டு வருகிறார் . இந்தப் படத்தை முடித்த கையோடு தன்னுடைய ஐம்பதாவது படத்தை இயக்கி நடிக்க இருக்கிறார் நடிகர் தனுஷ்.

இந்த படத்தில் தனுஷுடன் இணைந்து அபர்ணா பாலமுரளி ,சந்திப் கிஷன் ,எஸ் ஜே சூர்யா, காளிதாஸ் ஜெயராம் போன்ற பல பிரபலங்கள் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.  இப்படி இருக்கும் நிலையில் பல திரைப்படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டு வரும் தனுஷின் நடிப்பில்,

வெளியான மரியான் திரைப்படம் 10 ஆண்டுகள் நிறைவு செய்துள்ளது . அதை கொண்டாடும் வகையில் மரியான் படத்தின் இயக்குனர், தனுஷ், ஏ ஆர் ரகுமான் ,மரியான் படத்தின் நடிகை  பார்வதி போன்றவர்கள் வீடியோ காலில் இணைந்து மரியான் படத்தை பற்றிய பல விஷயங்களை பகிர்ந்து கொண்டனர்.

அதில் பேசிய மரியான் பட இயக்குனர் பரத் பாலா , நீங்கள் திரும்பவும் காதல் படத்தில் நடிக்க வேண்டும் , அதை நாங்கள் எல்லோரும் பார்க்க வேண்டும் என்று தனுஷிடம் அன்பு வேண்டுகோளாக கேட்டிருந்தார்.  அதற்கு பதில் அளித்த தனுஷ் , எனக்கு இப்போது 40 வயசு ஆகிவிட்டது.  இனிமேல் இந்த காதல் படம் எல்லாம்,

நமக்கு சுத்தமாக செட்டாகாது . அதையெல்லாம் அடுத்த தலைமுறை நடிகர்கள் செய்யட்டும் என்று கூறியிருந்தார் . இதை பார்த்த ரசிகர்கள் 60 வயதிலும் ஹீரோயினுடன் டூயட் பட ஆசைப்பட நினைக்கும் நடிகர்களுக்கு மத்தியில் இப்படி ஒரு நடிகரா என்று ஆச்சிரியத்தில் கூறி வருகின்றனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *