May 6, 2024

பா லிவுட்டி லும் கைவ ரிசை யை கா ட்டிய “காப் பி” மன் னன் அட் லீ..!! அப் ப ஜவா ன் படம் இந் த தமி ழ் படங்க ளின் காப் பி தா னா ..?? எவ்வள வு பட்டா லும் தி ருந் தாத அ ட்லீ ..!!

அட்லீ ஓர் பிரபலமான தமிழ் திரைப்பட இயக்குனர் ஆவார் . ஆரம்பத்தில் இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றி வந்த அட்லீ  கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான ராஜா ராணி என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் . இப்படி வெளியான முதல் திரைப்படமே இவருக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது.  பின்னர் இந்த படத்தை தொடர்ந்து விஜயை வைத்து தெறி , மெர்சல் ,

பிகில் என்று மூன்று சூப்பர் ஹிட் படங்களை கொடுத்திருந்தார் . இதன் பிறகு பாலிவுட் நடிகரான ஷாருக்கானை வைத்து ஜவான் என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார் இயக்குனர் அட்லீ  . பொதுவாகவே அட்லீ  என்று சொன்னாலே முதலில் ஞாபகத்துக்கு வருவது காப்பி தான்.  காரணம் அவருடைய ஒவ்வொரு படங்களும்,

ஒவ்வொரு படங்களின் காப்பி தான் . இதனால் காப்பி மன்னன் என்றெல்லாம் அட்லீ அழைக்கப்பட்டு வந்தார்.  இப்படி இருக்கும் நிலையில் அட்லீ  ஷாருக்கானை வைத்து இயக்கிய ஜவான் படத்தின் டிரைலர் இன்று வெளியாகி இருந்தது.  இந்த படத்தில் ஷாருக்கான் உடன் இணைந்து விஜய் சேதுபதி ,

நயன்தாரா ,தீபிகா படுகோன் போன்ற பல பிரபலங்கள் நடித்துள்ளனர்.  இப்படி இருக்கும் நிலையில் இந்தப் படத்தின் டிரைலர் வெளியாகி சக்கை போடு போட்டு வருகிறது . இருந்தாலும் படத்தில் அட்லீ  காட்டிய கைவரிசையை கண்டுபிடித்துள்ளனர் நெட்டிசன்கள் . அந்த வகையில் இந்த  படத்தில்,

இடம்பெற்ற ஒரு சில காட்சிகள் பாகுபலி 2 , அந்நியன் ,சிவாஜி, மெர்சல் போன்ற படங்களின் காப்பி என்று கூறப்படுகிறது . தற்போது அந்த புகைப்படம் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது . இதை பார்த்த ரசிகர்கள் எவ்வளவு பட்டாலும் அட்லீ  திருந்த மாட்டார் போல என்று கூறி வருகின்றனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *