April 29, 2024

” கோல்டன் ஸ்டார் ” கார்த்தியின் அழகிய குடும்பத்தை பார்த்துள்ளீர்களா ..?? முதல் முறையாக வெளியான புகைப்படங்கள் இதோ ..!!

கார்த்தி ஒரு தவிர்க்க முடியாத தமிழ் திரைப்பட நடிகர் ஆவார்.  மூத்த நடிகரான சிவகுமாரின் இளைய மகனான கார்த்தி ஆரம்பத்தில் இயக்குனர் மணிரத்னத்திடம் உதவி இயக்குனராக  பணியாற்றி வந்தார் . பின்னர் கடந்த 2007 ஆம் ஆண்டு இயக்குனர் அமீர் இயக்கத்தில் வெளியான பருத்திவீரன் என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார் நடிகர் கார்த்தி . இப்படி வெளியான முதல் திரைப்படமே ,

இவருக்கு மிகப்பெரிய அங்கீகாரத்தை பெற்று தந்தது என்று தான் சொல்ல வேண்டும் . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து ஆயிரத்தில் ஒருவன், பையா ,நான் மகான் அல்ல, சிறுத்தை ,மெட்ராஸ் ,கொம்பன் போன்ற பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களை வெகுவாக,

கவர்ந்திருந்தார் நடிகர் கார்த்தி.  குறிப்பாக இவர் படத்திற்கு படம் வித்தியாசமான கதைக்களங்களை தேர்வு செய்து நடித்து வந்ததால் இவருக்கென்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருந்து வருகிறது . தற்போது கார்த்தி இரண்டு படங்களுக்கு மேல் கைவசம் வைத்திருக்கிறார்.

இதனிடையே கடந்த 2011 ஆம் ஆண்டு ரஞ்சனி என்பவரை திருமணம் செய்து கொண்ட கார்த்திக்கு  ஒரு மகள் ,ஒரு மகன் உள்ளனர்.இப்படி இருக்கும் நிலையில் ” கோல்டன் ஸ்டார் ” என்ற அந்தஸ்தில் கலக்கிக் கொண்டு வரும் கார்த்தியின் குடும்ப புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *