May 8, 2024

என்ன நண்பா ரெடியா ..?? கட்சியின் பெயரை அறிவித்த விஜய் ..!! இந்த நாளுக்கு தானே தமிழ்நாடே காத்து இருந்துச்சு ..!!

கடந்த சில நாட்களாகவே நடிகர் விஜய்யின் அரசியல் வருகை குறித்த தகவல் தான் பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது.  மேலும் பல வருடங்களாக அரசியலுக்கு வருகிறேன் என்று சொல்லிக் கொண்டிருந்த விஜய் தற்போது தீவிரமாக அரசியலில் இறங்கி விட்டார் என்று தான் சொல்ல வேண்டும் அ. ந்த வகையில் கடந்த வருடம் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவ மாணவிகளை ,

நேரில் சந்தித்து ஊக்கத்தொகை வழங்கியது , வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருள் வழங்கியது என்று தன்னுடைய அரசியல் வாழ்க்கைக்கு அஸ்திவாரம் போட்டு வந்தார் விஜய்.  இப்படி இருந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ,

விஜய்யின் கட்சியின் பெயர் தமிழக முன்னேற்ற கழகம் என்று வெளியானது . ஆனால் தற்போது விஜய்யின் கட்சி பெயர் அது கிடையாதாம் . அந்த  வகையில் விஜய்யின் கட்சியின் பெயர் தமிழக வெற்றி கழகமாம். தற்போது அந்த தகவலை விஜய் அவர்களே அறிவித்துள்ளார் .

மேலும் அரசியல் என்பது தொழில் கிடையாது , அது ஒரு புனிதமான பணி . அதனால் அதற்காக என்னை முழுமையாக தயார்படுத்தி வருகிறேன்.  தற்போது ஒரு படத்தில் ஒப்பந்தமாகி விட்டதால் அதை முடித்த கையோடு முழுநேர அரசியலில் களமிறங்க உள்ளேன் என்று ,

தெரிவித்துள்ளார் நடிகர் விஜய் . இந்த தகவலை பார்த்த விஜய் ரசிகர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர். இதோ அந்த பதிவை நீங்களும் பாருங்க …

 

 

View this post on Instagram

 

A post shared by Vijay (@actorvijay)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *