ஒரு காலகட்டத்தில் தமிழ் சினிமா உலகில் தவிர்க்க முடியாத நடிகையாக இருந்து வந்தவர் தான் நடிகை லட்சுமி மேனன் . மலையாள படத்தின் மூலம் தன்னுடைய திரைப்பயணத்தை தொடங்கிய லட்சுமி மேனன் கடந்த 2012 ஆம் ஆண்டு சசிகுமார் நடிப்பில் வெளியான சுந்தரபாண்டியன் என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இப்படி வெளியான இவருடைய முதல் திரைப்படமே இவருக்கு ,
நல்ல வரவேற்பை பெற்று தந்தது என்று தான் சொல்ல வேண்டும் . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து கும்கி ,குட்டி புலி, பாண்டியநாடு, ஜிகர்தண்டா ,கொம்பன் ,வேதாளம் போன்ற பல சூப்பர் ஹிட் படங்களின் அடித்து தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டார்,
நடிகை லட்சுமிமேனன் . பின்னர் திடீரென சினிமாவை விட்டு காணாமல் போய்விட்டார் நடிகை லட்சுமி மேனன். பின்னர் நீண்ட இடைவேளைக்கு பிறகு புலிக்குத்தி பாண்டி என்ற படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்திருந்தார் நடிகை லட்சுமி மேனன் . ஆனால் இந்த படமும் பெரிய அளவில்,
வரவேற்பை பெறவில்லை . இதைத்தொடர்ந்து கடந்த வருடம் வெளியான சந்திரமுகி 2 திரைப்படமும் தோல்வி படமாக அமைந்தது . இப்படி இருக்கும் நிலையில் அடுத்ததாக பிக் பாஸ் டைட்டில் வின்னரான ஆரி அர்ஜுனன் ஹீரோவாக நடிக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக ,
கமிட்டாகி உள்ளாராம் நடிகை லட்சுமிமேனன் . இந்த படமாவது இவருக்கு கை கொடுக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம் . இதோ அந்தப் படத்தின் பூஜை புகைப்படங்களை நீங்களும் பாருங்க…