April 29, 2024

பிரபல மூத்த நடிகர் திடீர் மரணம் ..!! நேரில் சென்று அஞ்சலி செலுத்தும் முன்னணி பிரபலங்கள் ..!! சோகத்தில் வாடும் நடிகரின் குடும்பத்தினர் ..!!

ஜூனியர் பாலையா ஒரு பிரபலமான தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார் , மூத்த நடிகரான டி எஸ் பாலையாவின் மகனான ஜூனியர் பாலையா மேல்நாட்டு மருமகள் ,வாழ்வே மாயம் ,கரகாட்டக்காரன், ராசுக்குட்டி ,அமராவதி, வேட்டிய மடிச்சு கட்டு, ஜூலி கணபதி, ஜெயம் , சாட்டை , கும்கி , தனிஒருவன் , புலி போன்ற பல திரைப்படங்களில் நடித்திருந்தார்.  மேலும் கடைசியாக இவர் நேர்கொண்ட பார்வை , மாறா ,

என்னங்க சார் உங்க சட்டம் போன்ற படங்களில் நடித்திருந்தார் . மேலும் இவர் பெரும்பாலும் தமிழ் படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து அசத்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது . இதனிடையே  திருமணமான ஜூனியர் பாலையாவுக்கு நிவேதிதா மகளும் ,

ரோகித் என்ற மகனும் உள்ளனர் . இப்படி இருக்கும் நிலையில் சமீப காலமாக நடிப்பதை நிறுத்திய நடிகர்  ஜூனியர் பாலையா இன்று அதிகாலை மூச்சு திணறல் ஏற்பட்டு வீட்டிலேயே இறந்து விட்டாராம் . இவருக்கு 70 வயது எனபது குறிப்பிடத்தக்கது .  இவருடைய திடீர் மரணம் ,

தமிழ் திரையுலகை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது . இதைப் பார்த்த ரசிகர்கள்  நடிகர்  ஜூனியர் பாலையாவுக்கு தங்களுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *