May 21, 2024

2024 பொறந்து ஒரு நாள் தான் ஆச்சு ..!! வேலையை காட்டிய பிக்பாஸ் நிக்சன் ..!! கழுவி கழுவி ஊத்தும் ரசிகர்கள் ..!!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி ரசிகர்களின் பேவரைட் நிகழ்ச்சி என்று தான் சொல்ல வேண்டும்.  மேலும் ஒவ்வொரு சீசனிலும் ஒரு சில போட்டியாளர்கள் சக போட்டியாளர்களிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டு வருவார்கள்.  அந்த வகையில் பிக் பாஸ் சீசன் 7 ல்  சக போட்டியாளர்களிடம் லீலைகளை பண்ணியவர் தான் நிக்சன் . மேலும் ஆரம்பத்தில் சரியாக விளையாடி வந்த நிக்சன் ,

போகப் போக தன்னுடைய வேலையை காட்டத் தொடங்கினார் . அப்படி சக போட்டியாளரான ஐசுவுடன் இவர் அடித்த கூத்து அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான் . இப்படி இருக்கும் நிலையில் கடந்த வாரம் வெளியேறிய நிக்சன் வெளியே வந்ததும் பதிவு ஒன்றை போட்டு இருக்கிறார்.

அதில் இப்போதான் எல்லாத்தையும் பார்த்தேன் , எதிர்பார்க்காத எல்லாத்தையும் எதிர்ல பார்த்தது என்னா பீல்.  எவ்வளவு சப்போர்ட், எவ்வளவு லவ், இவ்வளவு பேருக்கு என்ன புடிச்சிருக்குன்னு உள்ள இருக்கிற வரைக்கும் எனக்கு தெரியல, ஒருவேளை தெரிந்திருந்தால்,

இன்னும் நல்லா விளையாடிருப்பனோ .? அதெல்லாம் யோசிக்கவே இல்ல ,மன்னிச்சிடுங்க . நான் உள்ள பிக் பாஸ் டைட்டில் வின் பண்ணனும்னு போகல, என்ன நல்லவனா காட்டிக்கணும்னு போகல ,நான் யாருன்னு நான் தெரிஞ்சுக்க தான் போனேன் . என்கிட்ட இருக்கிற நல்ல விஷயங்களை,

பாராட்டின எல்லாருக்கும் ரொம்ப நன்றி . என்கிட்ட இருக்கிற குறைய சுட்டி காட்டுன சுட்டி காட்டிட்டு இருக்க எல்லோருக்கும் ரொம்ப நன்றி என்று கூறியிருந்தார் நிக்சன்  . இதை பார்த்த பலரும் 2024 இல் மிகப்பெரிய உருட்டு இதுதான் என்று கூறி வருகின்றனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *