May 3, 2024

58 வயது முரட்டு நடிகருடன் இணையும் திரிஷா ..!! என்ன நடக்க போகுதோ தெரியல ..!!

தற்போது திரிஷாவின் காட்டில் மழை என்றுதான் சொல்ல வேண்டும் . காரணம் தற்போது அத்தனை திரைப்படங்களை கைவசம் வைத்திருக்கிறார் . அந்த வகையில் பொன்னியின் செல்வன் என்ற ஒரு படத்திற்கு பிறகு திரிஷாவின் மார்க்கெட் ராக்கெட் போல உயர்ந்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும்  . அப்படி பொன்னியின் செல்வன் படத்திற்கு பிறகு லியோ படத்தில் நடித்து,

ரசிகர்களை கவர்ந்த திரிஷா அடுத்ததாக அஜித்துடன் விடாமுயற்சி கமலுடன் தக் லைப் என்று பல திரைப்படங்களை கைவசம் வைத்திருக்கிறார் . இப்படி இருக்கும் நிலையில் இவர்களைத் தொடர்ந்து 58 வயது முரட்டு நடிகருடன் இணைய உள்ளாராம் நடிகை திரிஷா.

அவர் வேறு யாருமில்லை நடிகர் சல்மான் கான் தான்.  ஹிந்தி சினிமா உலகில் தவிர்க்க முடியாத முன்னணி  நடிகராக இருந்து வரும் சல்மான் கான் 58 வயதாகியும் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருந்து வருகிறார் . இதனாலேயே இவருடன் யாராவது நடிகைகள் ,

இணைந்து நடித்தால் உடனே கிசுகிசுவில் சிக்கி விடுவார்கள் . அப்படி தான் பீஸ்ட் படத்தில் நடித்து பிரபலமான பூஜா ஹெக்டே சல்மான் கான் உடன் நடித்த காதல் கிசுகிசுவில் சிக்கினார்.  இதை அடுத்து தற்போது திரிஷா சல்மான் கான் படத்தில் இணைய உள்ளதால்,

என்ன நடக்க போகுதோ தெரியல என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர் . அது மட்டுமல்லாமல் இந்த படத்திற்காக நயன்தாராவுக்கு பெரிய தொகை சம்பளமாக பேசப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *