தமிழ் சினிமாவில் இரண்டு முக்கிய ஜாம்பவான்களாக இருந்து வருபவர்கள் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலக நாயகன் கமல்ஹாசன் அவர்கள் . ஆரம்பத்தில் வெளியான அபூர்வராகங்கள் ,16 வயதினிலே ,அவள் அப்படித்தான் ,ஆடுபுலி ஆட்டம் ,மூன்று முடிச்சு ,இளமை ஊஞ்சலாடுகிறது ,நினைத்தாலே இனிக்கும் போன்ற பல திரைப்படங்களில் இருவரும் ஒன்றாக நடித்து அசத்தியிருந்தனர் ,
இதன்பிறகு தான் இருவரும் தங்களுக்குரிய பாணியில் கதைக்களங்களை தேர்வு செய்து நடித்து வந்தனர் . அப்படி ரஜினிக்கு ஸ்டைல் என்றால் கமலுக்கு திறமையான நடிப்பு . என்னதான் சினிமாவில் இவர்கள் இருவரும் போட்டி போட்டுக் கொண்டாலும் நிஜ வாழ்க்கையில்,
இருவரும் நல்ல நண்பர்களாகவே இருந்து வருகின்றனர் . இன்னும் சொல்லப்போனால் நட்புக்கு ஒரு சிறந்த உதாரணம் என்றால் அது ரஜினி கமல் தான் . மேலும் தமிழ் சினிமாவில் இருக்கும் பல நடிகர்கள் நண்பர்களாக இருந்தாலும், ஒரு சில நேரங்களில் எதிரி ஆகி விடுகிறார்கள்.
ஆனால் ஆரம்பத்தில் இருந்து இப்போது வரை ரஜினி , கமல் நல்ல நண்பர்களாக இருந்து வருகின்றனர். இப்படி இருக்கும் நிலையில் 21 வருடங்கள் கழித்து ஒரே ஸ்டூடியோவில் ரஜினியும் , கமலும் சந்தித்துள்ளனர். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தை கலக்கிக் கொண்டு வருகிறது.
இதைப்பார்த்த ரசிகர்கள் நட்புனா இப்படி இருக்கணும் என்று கூறிவருகின்றனர் . இதோ அந்த புகைப்படங்களை நீங்கள் பாருங்க…