வனிதா ஓர் பிரபலமான தமிழ் திரைப்பட நடிகை ஆவார். மூத்த நடிகரான விஜயகுமாரின் மகளான நடிகை வனிதா கடந்த 1995ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான சந்திரலேகா என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமானார் . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து மாணிக்கம் , நான் ராஜாவாகப் போகிறேன், சும்மா நச்சுனு இருக்கு, எம்ஜிஆர் சிவாஜி ரஜினி கமல் ,
அநீதி போன்ற பல திரைப்படங்களில் நடித்திருந்தார் நடிகை வனிதா விஜயகுமார் . இப்படி பல படங்களில் நடித்திருந்தாலும் இவர் ரசிகர்களிடையே பெரிய அளவில் பிரபலமானது பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தான். இந்த நிகழ்ச்சி தான் இவரை பெரிய அளவில்,
பிரபலமாக்கியது என்று தான் சொல்ல வேண்டும் . அது மட்டுமில்லாமல் மூன்று திருமணம் செய்து சர்ச்சையையும் கிளப்பி இருந்த நடிகை வனிதா விஜயகுமார் தற்போது பல திரைப்படங்களின் பிசியாக நடித்துக் கொண்டு வருகிறார். இப்படி இருக்கும் நிலையில்,
பலரும் பார்த்திடாத நடிகை வனிதாவின் இளம் வயது புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது இதோ அந்த புகைப்படங்களை நீங்களும் பாருங்க…