April 27, 2024

கு ம்கி படத் தில் முத லில் ந டி க்க இரு ந்தது வி க்ரம் பிர பு இல் லை யா ..?? இந் த ரஜி னி பட ந டிகர் தா ன் நடி க்க இரு ந்தா ரா ..?? கடை சி நேரத் தி ல் ப றிபோ ன வா ய்ப் பு ..!!

தமிழ் சினிமா உலகில் கடந்த 2012 ஆம் ஆண்டு இயக்குனர் பிரபு சாலமன் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடிப்பில்  வெளியான திரைப்படம் தான் கும்கி.  எப்போதும் வித்தியாசமான கதைக்களங்களை கொடுக்கும் பிரபு சாலமன் கும்கி படத்தின் மூலம்  ரசிகர்களுக்கு ஒரு வித்தியாசமான திரை  அனுபவத்தை கொடுத்திருந்தார்.  இந்த படத்தின் மூலம்தான் விக்ரம் பிரபு மற்றும் லட்சுமி மேனன் ,

போன்ற நடிகர் , நடிகைகள் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார்கள் . அதோடு இவர்களுடன் இணைந்து தம்பி ராமையா, அஸ்வின் ,ஜூனியர் பாலையா போன்ற பல பிரபலங்கள் நடித்திருந்தனர்.  இப்படி வெளியான திரைப்படம் சூப்பர் ஹிட் படமாக அமைந்தது.  குறிப்பாக இந்த படத்தில்,

விக்ரம் பிரபுவின் நடிப்பு பெரிய அளவில் பேசப்பட்டது  என்று தான் சொல்ல வேண்டும் . அந்த அளவிற்கு முதல் படத்திலேயே ஸ்கோர் செய்தார் விக்ரம் பிரபு . அது மட்டுமல்லாமல் சிறந்த நடிகருக்கான தமிழ்நாடு மாநில திரைப்பட விருதையும் வென்றார் நடிகர் விக்ரம் பிரபு .

ஆனால் இந்த படத்தில் முதலில் நடிக்க இருந்தது வேறொரு நடிகர் தானாம் . அவர் வேறு யாருமில்லை நடிகர் வசந்த் ரவி தான்.  தரமணி என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான அஸ்வின் தொடர்ந்து ராக்கி, அஸ்வின்ஸ் , ஜெயிலர் போன்ற பல,

திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.  இவர் தான் முதலில் கும்கி படத்தில் நடிக்க இருந்தாராம் . அப்படி இந்த படத்திற்காக ஹீரோ என்று முடிவு செய்த பிறகு இயக்குனருக்கு திருப்தி இல்லையாம் . இதன் பிறகு தான் இவருக்கு பதிலாக விக்ரம் பிரபு களமிறங்கியதாக கூறப்படுகிறது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *