April 20, 2024

நல்ல மருமகன் என்று பெயர் எடுத்த தனுஷும் , மாமனார் ரஜினியும் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் உள்ளே ..!!

தமிழ் சினிமாவை கலக்கி வரும் பிரபல நடிகர்களில் ஒருவர் தான் நடிகர் தனுஷ் . இயக்குனர் கஸ்தூரிராஜாவின் இளைய மகனான தனுஷ் துள்ளுவதோ இளமை என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார்.  பின்னர் குறிப்பிட்ட காலகட்டத்திலேயே தன்னுடைய விடாமுயற்சியின் மூலம் தவிர்க்க முடியாத நடிகர் என்ற அந்தஸ்தை பெற்றார் நடிகர் தனுஷ்.  இப்படி நடித்துக் கொண்டிருக்கும் போதே ,

கடந்த 2004 ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யாவை திருமணம் செய்து கொண்டார் தனுஷ்.  திருமணமான இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.  மேலும் திருமணமாகி 18 வருடங்கள் இருவரும் ஒன்றாக வாழ்ந்து வந்த நிலையில் ,

கடந்த வருடம் திடீரென இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர் . இது அப்போது பேரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது . இதனால் தனுஷ் மீது  சூப்பர் ஸ்டார் கோபத்தில் இருந்ததாகவும் தகவல் வெளியானது . ஆனால் விவாகரத்து ஆவதற்கு முன்பு ரஜினி வாயாலயே,

நல்ல மருமகன் என்று பெயர் எடுத்தார் தனுஷ்.  இப்படி இருக்கும் நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும் , தனுஷும் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தை கலக்கிக்கொண்டு வருகிறது.  இதோ அந்த புகைப்படங்களை நீங்களும் பாருங்க…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *