தமிழ் சினிமா உலகில் கடந்த 2016 ஆம் ஆண்டு இயக்குனர் சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான திரைப்படம் தான் பிச்சைக்காரன் . எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் வெளியான இந்த திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்தது . இந்த படத்தில் விஜய் ஆண்டனிக்கு அம்மாவாக நடித்திருந்தவர் தான் நடிகை தீபா ராமானுஜம் .
இந்த படத்தில் இவருடைய நடிப்பு பெரிய அளவில் பேசப்பட்டது . மேலும் இவர் கடந்த 1997 ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான அருணாச்சலம் என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார் நடிகை தீபா ராமானுஜம் .பின்னர் இந்த படத்தை தொடர்ந்து,
கமல் நடிப்பில் வெளியான உத்தம வில்லன், சூர்யா நடிப்பில் வெளியான பசங்க 2, சிவகார் த்திகேயன் நடிப்பில் வெளியான ரஜினி முருகன், சிம்பு நடிப்பில் வெளியான இது நம்ம ஆளு போன்ற பல திரைப்படங்களில் நடித்திருந்தார் நடிகை தீபா ராமானுஜம் .அப்படி கடைசியாக,
துருவ் விக்ரம் நடிப்பில் வெளியான ஆதித்ய வர்மா என்ற படத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு கடந்த நான்கு வருடமாக எந்த ஒரு படங்களிலும் நடிக்காமல் இருந்து வருகிறார் நடிகை தீபா ராமானுஜம் .இதன் பிறகு வெளிநாட்டில் செட்டிலான தீபா ராமானுஜம் தற்போது ஒரு,
தொழிலதிபராக இருந்து வருகிறாராம். இப்படி இருக்கும் நிலையில் அவருடைய லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது . இதை பார்த்த ரசிகர்கள் பிச்சைக்காரன் படத்தில் நடித்த நடிகையா இது .? செம மாடர்னாக மாறிவிட்டாரே என்று கூறி வருகின்றனர்…