April 28, 2024

“இ ளைய தள பதி” பட்ட மே என்னு டை யது தா ன் ..!! அப் பாவு ம் , மகனு ம் சேர் ந்து இப் படி பண்ணிட் டா ங்க ..!! உண் மை யை புட்டு புட் டு வை த்த 90 ஸ் ந டி கர் ..!!

தற்போது தமிழ் சினிமா உலகில் அதிகம் மார்க்கெட் உள்ள நடிகர் என்றால் அது விஜய் தான் . அந்த அளவிற்கு தவிர்க்க முடியாத நடிகராக கலக்கிக் கொண்டு வருகிறார் நடிகர் விஜய்.  மேலும் எல்லா நடிகர்களுக்கும் இருப்பது போல நடிகர் விஜய்க்கும் “இளைய தளபதி”  என்ற பட்டம் உள்ளது என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.  இப்படி இருக்கும் நிலையில் இளைய தளபதி பட்டமே என்னுடையது தான்,

என்று பிரபல நடிகர் ஒருவர் பரபரப்பை கிளப்பியுள்ளார் . அவர் வேறு யாருமில்லை நடிகர் சரவணன் தான்.  வைதேகி வந்தாச்சு என்ற படத்தின் மூலம் அறிமுகமான சரவணன் தொடர்ந்து பொண்டாட்டி ராஜ்ஜியம், மாமியார் வீடு, பெற்றெடுத்த பிள்ளை ,நல்லதே நடக்கும் போன்ற பல திரைப்படங்களில் நடித்திருந்தார் .

அப்படி 90களில் இவர் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக இருந்தபோது இவருக்காக சேலத்தில் பாராட்டு விழா ஒன்றை நடத்தினார்கள்.  அந்த பாராட்டு விழாவில் கலந்து கொண்ட பிரபலம் ஒருவர் தான் சரவணனுக்கு “இளைய தளபதி”  என்ற பட்டத்தை கொடுத்தாராம் . இதன் பிறகு நல்லதே நடக்கும் என்ற படத்தில் இருந்து,

“இளைய தளபதி சரவணன்” என்று போட ஆரம்பித்தார்கள் .  இப்படி தவிர்க்க முடியாத நடிகராக இருந்து வந்த சரவணனுக்கு ஒரு கட்டத்தில் பட வாய்ப்புகள் குறைய தொடங்கியது .  இந்த நேரத்தில் தான் நடிகர் விஜய் ஹீரோவாக தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்திருக்கிறார்.  அதுமட்டுமில்லாமல் “இளைய தளபதி விஜய் ” ,

என்ற பட்டத்துடன் களமிறங்கி இருக்கிறார் விஜய் . இதை பார்த்த சரவணன் நேராக இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகரின் அலுவலகத்திற்கு சென்று என்னுடைய டைட்டிலை எதற்கு பயன்படுத்துகிறீர்கள் என்று கேட்டிருக்கிறார்.  இதற்கு பதில் அளித்த எஸ்ஏ சந்திரசேகர்,  இனிமேல் உங்களுக்கு படம் வந்தால்,

நீங்க அதை போட்டுக்கோங்க என்று சொன்னாராம்.  ஆனால் அதன் பிறகு சரவணனுக்கு பெரிய அளவில் பட வாய்ப்புகள் எதுவும் அமையவில்லையாம்.  இதனால் அவரும் அதை அப்படியே விட்டு விட்டாராம்.இதை பார்த்த ரசிகர்கள் அப்பாவும் , மகனும் சேர்ந்து இப்படி எல்லாமா பண்ணுனார்கள் என்று கூறி வருகின்றனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *