April 24, 2024

பாலிவுட்டிலும் மாஸ் காட்டும் அனிருத் ..!! முதல் படத்திற்கே இப்படியொரு விருதா ..??

தமிழ் சினிமாவை கலக்கி வரும் டாப் இசையமைப்பாளர்களில் ஒருவர் தான் அனிருத்.  தனுஷ் நடிப்பில் வெளியான 3 என்ற படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார் அனிருத் . இப்படி வெளியான முதல் படத்திலேயே தன்னுடைய இசையால் ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களையும் கவர்ந்து விட்டார் அனிருத் . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து பல சூப்பர் ஹிட் படங்களுக்கு இசையமைத்து,

தவிர்க்க முடியாத இசையமைப்பாளர் என்ற அந்தஸ்தை பெற்றார் அனிருத் . அது மட்டுமல்லாமல் தமிழ் சினிமாவை கலக்கி வரும் ரஜினி ,கமல், விஜய் ,அஜித் ,சூர்யா போன்ற பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு தொடர்ச்சியாக இசையமைத்து வருகிறார் அனிருத் .

அதோடு கைவசம் ஐந்து திரைப்படங்களுக்கு மேல் வைத்திருக்கிறார் அனிருத்.  இப்படி இருக்கும் நிலையில் கடந்த வருடம் இயக்குனர் அட்லீ இயக்கத்தில் வெளியான ஜவான் என்ற ஹிந்தி படத்துக்கு இசையமைத்திருந்தார் அனிருத்.  இப்படி இவர் இசையமைத்த ,

முதல் ஹிந்தி படத்திற்காக சிறந்த இசையமைப்பாளருக்கான தாதா சாகேப் பால்கே  விருதை வென்றிருக்கிறார் அனிருத்.  இதோ அந்த புகைப்படங்களை நீங்களும் பாருங்க…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *