April 30, 2024

கட்சியின் பெயரை அறிவித்த விஜய் ..!! திமுக,  அதிமுகவுக்கு போட்டியாக இப்படியொரு பெயரா ..?? தளபதியின் ஆட்டம் ஆரம்பம் ..!!

நடிகர் விஜய் விரைவில் அரசியலில் களமிறங்க உள்ளார் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.  அதற்காக இப்போதே தன்னுடைய ரசிகர் மன்றத்தை வைத்து பல உதவிகளை செய்து வருகிறார் விஜய்.  அந்த வகையில் கடந்த ஆண்டு பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பில் நல்ல மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளுக்கு ஊக்கத்தொகை மற்றும் பரிசு பொருள் வழங்கியது , சமீபத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட,

மக்களை நேரில் சென்று நிவாரண பொருள் வழங்கியது என்று அரசியலுக்கு அஸ்திவாரம் போட்டு வருகிறார் நடிகர் விஜய் . தற்போது கோட் என்ற படத்தில் பிஸியாக நடித்துக்கொண்டு வருவதால் இந்த படத்தை முடித்த கையோடு விஜய் அரசியலில் களமிறங்குவார் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் சமீபத்தில் தன்னுடைய ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் கூட்டம் ஒன்றை நடத்தி இருக்கிறார் விஜய் . அதில் அரசியல் நகர்வு குறித்த முக்கிய முடிவுகளை எடுத்ததாக கூறப்படுகிறது . இப்படி இருக்கும் நிலையில் நடிகர் விஜய்யின் அரசியல் கட்சியின் பெயர் இணையத்தில் கசிந்துள்ளது .

அந்த வகையில் திமுக,  அதிமுகவுக்கு போட்டியாக தமுக என்று பெயர் வைத்ததாக கூறப்படுகிறது . தமுக என்றால் தமிழக முன்னேற்ற கழகம் அல்லது தளபதி முன்னேற்றக் கலகம் என்று கூட வைத்துக் கொள்ளலாம்.  இந்த தகவலால் மற்ற கட்சிகள் எல்லாம் பயத்தில் இருந்து வருகின்றனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *