April 27, 2024

ஸ்ருதிஹாசன் கிறிஸ்தவ மதத்திற்கு மாறிவிட்டாரா..?? சிலுவையுடன் போட்டோ சூட் நடத்தும் கமலின் பொண்ணு ..!!

உலகநாயகன் கமல்ஹாசனின் மூத்த மகள் தான் நடிகை ஸ்ருதிஹாசன் . ஆரம்பத்தில் குழந்தை நட்சத்திரமாக கலக்கிக்கொண்டு வந்த ஸ்ருதிஹாசன் கடந்த 2011 ஆம் ஆண்டு சூர்யா நடிப்பில் வெளியான ஏழாம் அறிவு என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமானார்.  இப்படி வெளியான முதல் படத்திலேயே நல்ல வரவேற்பை பெற்ற ஸ்ருதிஹாசன் தொடர்ந்து தனுஷ் நடிப்பில் வெளியான 3,

விஷால் நடிப்பில் வெளியான பூஜை, விஜய் நடிப்பில் வெளியான புலி, அஜித் நடிப்பில் வெளியான வேதாளம் போன்ற பல திரைப்படங்களில் நடித்து தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துக்கொண்டார் . இதன் பிறகு ஒரு கட்டத்தில் இவருக்கு தமிழில் சுத்தமாக பட வாய்ப்புகள் குறைந்தது.

இதனால் தெலுங்கு சினிமா பக்கம் தஞ்சமடைந்தார் நடிகை ஸ்ருதிஹாசன் . அதோடு தற்போது ஒரு ஆங்கில படத்திலும் நடித்துக்கொண்டு வருகிறார் நடிகை ஸ்ருதிஹாசன் . இப்படி இருக்கும் நிலையில் நடிகை ஸ்ருதிஹாசன் கிறிஸ்தவ மதத்திற்கு மாறிவிட்டாரா என்ற,

சந்தேகம் அனைவருக்கும் எழுந்துள்ளது . காரணம் அண்மைக்காலமாக அவர் நடத்தி வரும் போட்டோ சூட்களில் சிலுவை போட்ட டாலரை அணிந்திருக்கிறார் . அதோடு சமீபத்தில் இவர் வெளியிட்ட புகைப்படத்தில் மிகப்பெரிய சிலுவை டாலரை அணிந்து போட்டோ ,

சூட் நடத்தி இருந்தார் . இதனால் பலரும் நடிகை ஸ்ருதிஹாசன் கிறிஸ்தவ மதத்திற்கு மாறிவிட்டாரா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர் . இதோ வந்த புகைப்படங்களை நீங்களும் பாருங்க…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *