April 27, 2024

அடுத்த ஜென்மத்தில் இந்த நடிகையின் வயிற்றில் பிறக்கணும் ..!! ஆசையை சொல்லிய இயக்குனர் மிஷ்கின் ..!! கண்ணீர் விட்ட நடிகை ..!!

தமிழ் சினிமா உலகில் ஒரு தரமான இயக்குனராக இருந்து வருபவர் இயக்குனர் மிஷ்கின். ஆனால் அண்மைக்காலமாக இவர் நடிப்பிலும் கலக்கிக்கொண்டு வருகிறார் . என்னதான் இவர் இயக்குனர் , நடிகர் என்று கலக்கினாலும் அடிக்கடி தன்னுடைய சர்ச்சையான பேச்சால் சர்ச்சையில் சிக்கிக்கொண்டு வருகிறார் . அந்த வகையில் சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் அடுத்த ஜென்மத்தில் அந்த நடிகையின்,

வயிற்றில் பிறக்கணும் என்று கூறியிருக்கிறார் . அவர் வேறு யாரும் இல்லை நடிகை பூர்ணா.  மலையாள படத்தின் மூலம் அறிமுகமான பூர்ணா கடந்த 2008 ஆம் ஆண்டு பரத் நடிப்பில் வெளியான முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.

பின்னர் இந்த படத்தை தொடர்ந்து கந்தகோட்டை ,ஆடுபுலி, வித்தகன் ,ஜன்னல் ஓரம், தகராறு ,காப்பான் போன்ற பல திரைப்படங்களில் நடித்திருந்தார் . மேலும் இவர் மிஷ்கின் நடிப்பில் வெளியான சவரக்கத்தி படத்திலும் நடித்திருந்தார் என்பதை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இவருடைய,

நடிப்பில் அடுத்ததாக வெளியாக உள்ள திரைப்படம் தான் டெவில் . இந்த படத்திற்கு மிஷ்கின் இசையமைத்துள்ளார்.  இதையடுத்து இந்த படத்தின் பிரஸ் மீட்டில் பேசிய மிஷ்கின் , பூர்ணா எனக்கு அவ்வளவு அன்பை கொடுத்திருக்கிறாள், அடுத்த ஜென்மத்தில் இவளுடைய வயிற்றில் பிறக்கணும்.

அவள் எனக்கு அம்மாவா இருக்கணும், அவ்வளவு நல்லவன் ,அதனால் தான் பூர்ணா என் படத்தில் இருக்க வேண்டும் என்று நினைப்பேன். ஆனால் பலரும் என்னையும் ,பூர்ணாவையும் தப்பாக பேசுவார்கள் . ஆனால் அவர் ரொம்பவும் மென்மையானவள் என்று கூறியிருந்தார் மிஷ்கின்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *