April 25, 2024

ராசியில்லாத நடிகைக்கு வாய்ப்பு கொடுக்கும் சிவகார்த்திகேயன் ..!! வேலியில் போற ஓணானை வேட்டிக்குள் விட்ட கதையா ஆகிறபோது ..!!

நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகி வரும் எஸ்கே 21 என்ற படத்தில் பிஸியாக நடித்துக் கொண்டு வருகிறார் . இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை சாய் பல்லவி நடித்து வருகிறார் . இந்த படத்தை கமல்ஹாசன் தயாரிக்கிறார் . இதைத்தொடர்ந்து அடுத்ததாக இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் இயக்க உள்ள புதிய படத்தில் நடிக்க இருக்கிறார்,

நடிகர் சிவகார்த்திகேயன் . இந்தப் படத்தில் சீதா ராமம் புகழ் மிருணாள் தாகூர் நடிக்க உள்ளதாக தகவல் வெளியானது.  ஆனால் தற்போது அவருக்கு பதிலாக ராசியில்லாத நடிகைக்கு வாய்ப்பு கொடுக்க உள்ளார்களாம்.  அவர் வேறு யாருமில்லை நடிகை பூஜா ஹெக்டே தான் .

அந்த வகையில் கடந்த 2012 ஆம் ஆண்டு ஜீவா நடிப்பில் வெளியான முகமூடி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமானார் நடிகை பூஜா ஹெக்டே . ஆனால் இந்த திரைப்படம் மோசமான வரவேற்பையே பெற்றது.  பின்னர் பல வருடங்கள்,

இடைவேளைக்குப் பிறகு விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் படத்தில் நடித்திருந்தார் பூஜா ஹெக்டே.  ஆனால் இந்த திரைப்படமும் மண்ணை கவ்வியது . அது மட்டுமல்லாமல் சமீபத்தில் இவர் நடித்த ஆறு திரைப்படங்கள் தொடர் தோல்வியை சந்தித்தது . இதனால் ராசி இல்லாத நடிகை,

என்று முத்திரை குத்தப்பட்டார் பூஜா ஹெக்டே . இப்படி இருக்கும் நிலையில் பூஜா ஹெக்டேவுக்கு சிவகார்த்திகேயன் வாய்ப்பு கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது . இந்தப் படமாவது இவருக்கு கைகொடுக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *