April 29, 2024

முதல் அழைப்பு விநாயகருக்கு தான் ..!! வருங்கால கணவருடன் சென்று ஆசி வாங்கிய அயலான் பட நடிகை ..!!

தென்னிந்திய சினிமாவை கலக்கி வரும் பிரபல நடிகைகளில் ஒருவர் தான் நடிகை ரகுல் ப்ரீத்தி சிங்.  கன்னட படத்தின் மூலம் தமிழ் திரைப்பயணத்தை தொடங்கிய ரகுல் ப்ரீத்தி சிங் கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான தடையறத் தாக்க என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமானார் . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து புத்தகம் ,என்னமோ ஏதோ ,ஸ்பைடர்,

தீரன் அதிகாரம் ஒன்று, தேவ் , என் ஜி கே போன்ற பல திரைப்படங்களில் நடித்திருந்தார்.  குறிப்பாக சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான அயலான் திரைப்படம் ரகுல் ப்ரீத்தி சிங்குக்கு ஓரளவிற்கு பெயரை பெற்று தந்தது.  இதையடுத்து இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில்,

கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார் நடிகை ரகுல் ப்ரீத்தி சிங்.  இப்படி இருக்கும் நிலையில் 33 வயதான ரகுல் ப்ரீத்தி சிங் விரைவில் நடிகரும் தயாரிப்பாளருமான ஜாக்கி பக்னானி என்பவரை திருமணம் செய்ய இருக்கிறார்.

இந்நிலையில் திருமணம் நன்றாக நடைபெற வேண்டும் என்பதற்காக திருமணத்திற்கு முன்பே மும்பையில் இருக்கும் பிரசித்தி பெற்ற விநாயகர் கோயிலுக்கு சென்று இருவரும் ஆசி வாங்கியுள்ளனர் . அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *