May 7, 2024

சிவகார்த்திகேயனும் , வருங்கால சிவகார்த்திகேயனும் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இதோ ..!!

கவின் ஓர் வளர்ந்த வரும் தமிழ் திரைப்பட நடிகர் ஆவார் . விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான கனா காணும் காலங்கள் கல்லூரி சாலை என்ற சீரியல் மூலம் அறிமுகமான கவின் தொடர்ந்து பல சீரியல்களில் நடித்திருந்தார்.  இதன் பிறகு படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்த கவின் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான நட்புனா என்னன்னு தெரியுமா என்ற படத்தின் மூலம் ,

ஹீரோவாக அறிமுகமானார் . ஆனால் இந்த திரைப்படம் இவருக்கு பெரிய அளவில் வரவேற்பை பெற்றுத் தரவில்லை . ஆனால் இதன்பிறகு இவர் நடித்திருந்த லிப்ட்  மற்றும் டாடா போன்ற திரைப்படங்கள் இதற்கு மிகப்பெரிய அங்கீகாரத்தை பெற்று தந்தது என்று தான் சொல்ல வேண்டும்.

குறிப்பாக டாடா படத்திற்கு பிறகு கவினின் மார்க்கெட் உச்சத்தில் இருந்து வருகிறது . தற்போது ஸ்டார் என்ற படத்தில் பிஸியாக நடித்துக் கொண்டு வருகிறார் நடிகர் கவின் . மேலும் இவர் வருங்காலத்தில் சிவகார்த்திகேயன் போல நம்ம வீட்டு பிள்ளையாக இருப்பார் ,

என்றும் பலரும் கூறி வருகின்றனர் . இப்படி இருக்கும் நிலையில் சிவகார்த்திகேயனும் , வருங்கால சிவகார்த்திகேயனும் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. இதோ அந்த புகைப்படங்களை நீங்களும் பாருங்க …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *