April 26, 2024

திருநங்கையாக மாறப்போகும் சிம்பு ..!! இது என்ன புது கதையா இருக்கு ..?? வெளிவந்த விபரம் உள்ளே ..!!

தமிழ் சினிமாவை கலக்கி வரும் முக்கிய நடிகர்களில் ஒருவர் தான் நடிகர் சிம்பு . இயக்குனரும் நடிகருமான டி ராஜேந்தரின் மூத்த மகனான சிம்பு ஆரம்பத்தில் குழந்தை நட்சத்திரமாக கலக்கிக்கொண்டு வந்தார் .  பின்னர் காதல் அழிவதில்லை என்ற படத்தின் மூலம் ஹீரோவான சிம்பு குறிப்பிட்ட காலகட்டத்திலேயே ரசிகர்களின் ஃபேவரைட் நடிகராக மாறினார் . இப்படி பிரபலமான நடிகராக இருந்துவந்த ,

சிம்பு இடையில் பல காதல் சர்ச்சைகளில் சிக்கி பெயரைக் கெடுத்துக் கொண்டார் . இதனால் இவருடைய  மார்க்கெட் அப்படியே குறைந்தது. பின்னர் உடல் எடை எல்லாத்தையும் குறைத்து மாநாடு படத்தின் மூலம் தரமான ரீ என்ட்ரி கொடுத்திருந்தார்  நடிகர் சிம்பு .

சிம்பு வேற லெவலில் திரும்ப வருவாருன்னு யாருமே எதிர்பார்க்கல . இதன் பிறகு இவர் நடித்த வெந்து தணிந்தது  காடு, பத்து தல போன்ற திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது.  இதை அடுத்து இயக்குனர் தேசிய பெரியசாமி இயக்கத்தில் உருவாகி வரும் புதிய படத்தில்,

பிசியாக நடித்துக்கொண்டு வருகிறார் சிம்பு.  இந்த படத்தை உலகநாயகன் கமல்ஹாசன் தயாரிக்கிறார் . வரலாற்று கதைக்களத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் சிம்பு இரட்டை வேடங்களில் நடிக்கிறாராம்.  தற்போது இன்னொரு தகவலும் வெளியாகி உள்ளது .

அதாவது இந்த படத்தில் வில்லனாக நடிப்பதும் சிம்பு தானாம். ஆனால் அது திருநங்கை கதாபாத்திரமாம் . அதற்காக நடை ,உடை, பாவணையை மாற்றி பயிற்சி பெற்று வருகிறாராம் சிம்பு…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *