April 30, 2024

சும்மா தீயா இருக்கு ..!! இராணுவ வீரராக மிரட்டும் சிவகார்த்திகேயன் ..!! புகைப்படங்களை பார்த்து வாய்ப்பிளந்த ரசிகர்கள் ..!!

நடிகர் சிவகார்த்திகேயனின் மார்க்கெட் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே போகிறது என்று தான் சொல்ல வேண்டும்.  அப்படி சின்னத்திரை தொகுப்பாளராக தன்னுடைய பயணத்தை தொடங்கிய சிவகார்த்திகேயன் மெரீனா என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார் . பின்னர் குறிப்பிட்ட காலகட்டத்திலேயே பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து ரசிகர்களின் பெயரை நடிகராக மாறினார் சிவகார்த்திகேயன் .

அப்படி ஆரம்பத்தில் காமெடிக்கு முக்கியத்துவம் உள்ள கதைக்களங்களை தேர்வு செய்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்த சிவகார்த்திகேயன் தற்போது கதைக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை தேர்வு செய்து தான் ஒரு தரமான நடிகர் என்று தொடர்ந்து நிரூபித்து வருகிறார்.

அந்த வகையில் சமீபத்தில் இவருடைய நடிப்பில் வெளியான மாவீரன் ,அயலான் போன்ற இரண்டு திரைப்படங்களுமே நல்ல வரவேற்பை பெற்றது  மட்டுமல்லாமல் வசூலிலும் நல்ல வரவேற்பை பெற்றது . இதை அடுத்து  தற்போது இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில்,

உருவாகியுள்ள அமரன் என்ற படத்தில் நடித்த முடித்துள்ளார் சிவகார்த்திகேயன்.  உலக நாயகன் கமல்ஹாசன் தயாரித்த இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை சாய் பல்லவி நடித்திருக்கிறார்.  இப்படி இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி,

ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.  குறிப்பாக இராணுவ அதிகாரி கதாபாத்திரத்தில் ரசிகர்களை மிரட்டி இருக்கிறார் சிவகார்த்திகேயன்.  இதோ அந்த புகைப்படங்களை நீங்களும் பாருங்க…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *