April 26, 2024

நம்ம குடும்பத்துக்கு இதெல்லாம் செட்டாகாது ..!! திடீரென கவர்ச்சிக்கு மாறும் கீர்த்தி சுரேஷ் ..!! எச்சரிக்கும் ரசிகர்கள் ..!!

தென்னிந்திய சினிமா உலகில் பிரபலமான நடிகையாக இருந்து வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ் . முன்னாள் நடிகையான மேனகாவின் மகளான கீர்த்தி சுரேஷ் ஆரம்பத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்துக்கொண்டு வந்தார்.  பின்னர் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான இது என்ன மாயம் என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் நடிகை கீர்த்தி சுரேஷ் . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து ரஜினி முருகன்,

ரெமோ ,பைரவா ,தானா சேர்ந்த கூட்டம் , சர்கார் போன்ற பல திரைப்படங்களில் நடித்து தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டார் நடிகை கீர்த்தி சுரேஷ்.  மேலும் இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு , மலையாளம் மற்றும் ஹிந்தி மொழி படங்களிலும் ,

தொடர்ந்து நடித்துக்கொண்டு வருகிறார்.  ஆனால் அண்மை காலமாக இவருடைய நடிப்பில் வெளியான எந்த படங்களும் நல்ல வரவேற்பை பெறவில்லை . அப்படி இருந்தும் கூட தற்போது நான்கு திரைப்படங்களுக்கு மேல் கைவசம் வைத்திருக்கிறார் கீர்த்தி சுரேஷ் .

மேலும் ஆரம்பத்தில் இருந்தே குடும்ப பங்கான கதாபாத்திரங்களை தேர்வு செய்தும் , கவர்ச்சி காட்டாமலும் வெகுவாக கவர்ந்து வந்த கீர்த்தி சுரேஷ் அண்மைக்காலமாக தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ஷாக்காக்கி வருகிறார். அந்த வகையில் சைரன்,

படத்தின் ப்ரமோஷனுக்காக கவர்ச்சி உடையில் வந்திருந்தார் நடிகை கீர்த்தி சுரேஷ் . அந்தப் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது.  இதை பார்த்து ரசிகர்கள் இதெல்லாம் நம்ம குடும்பத்துக்கு செட்டாகாது கீர்த்தி என்று கூறி  வருகின்றனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *