April 30, 2024

இந்தாங்க கார் சாவி ..!! சூப்பர் ஹிட்டடித்த ஜெயிலர் ..!! நெல்சனுக்கு காரை பரிசாக கொடுத்த கலாநிதி மாறன் ..!! விலையை கேட்டா தலை சுத்துதே ..!!

நெல்சன் திலிப் குமார் ஓர் பிரபலமான தமிழ் திரைப்பட இயக்குனர் ஆவார் .  ஆரம்பத்தில் விஜய் தொலைக்காட்சியில் பணியாற்றி வந்த நெல்சன் நயன்தாரா நடிப்பில் வெளியான கோலமாவு கோகிலா என்ற படத்தின் மூலம் இயக்குனர் அவதாரம் எடுத்தார் . இப்படி வெளியான முதல் படத்திலேயே முத்திரை பதித்த நெல்சன் தொடர்ந்து சிவகார்த்திகேயனை வைத்து டாக்டர்,  விஜய்யை  வைத்து பீஸ்ட் போன்ற படங்களை,

இயக்கியிருந்தார் . இதைத்தொடர்ந்து இவருக்கு சூப்பர் ஸ்டாரை வைத்து படம் இயக்கும் வாய்ப்பு கிடைத்தது . அப்படி கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்ட நெல்சன் ஜெயிலர் படத்தை கொஞ்சம் கொஞ்சமாக செதுக்கினார் . அப்படி கடந்த பத்தாம் தேதி வெளியான,

இந்த திரைப்படம்  யாருமே  எதிர்பார்க்காத அளவிற்கு மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்துள்ளது . அது மட்டுமில்லாமல் இந்த திரைப்படம் இதுவரை 600 கோடி வசூலை தொட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.  குறிப்பாக ஜெயிலர் படத்தை தயாரித்த சன் பிக்சர்ஸ் நிறுவனம்,

இதுவரை இவ்வளவு பெரிய லாபத்தை எடுக்கவில்லை.  இதனால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு பல கோடி செக் போட்டு கொடுத்தது மட்டுமில்லாமல் பிஎம்டபிள்யூ காரை பரிசாக கொடுத்திருந்தார் கலாநிதி மாறன்.  இவரைத் தொடர்ந்து ஏழு விலை உயர்ந்த கார்களை நிறுத்தி,

அதில் ஏதாவது ஒரு காரை தேர்வு செய்ய சொல்லியிருக்கிறார் கலாநிதி மாறன்.  அப்படி நெல்சன்  PORSCHE காரை செலக்ட் செய்து இருக்கிறார்.  அந்த காரின் விலை மட்டும் நாலு கோடி ரூபாயாம்.  தற்போது அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது…

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *