May 1, 2024

சிவகார்த்திகேயனுக்காக சூப்பர் நடிகையை பிடித்த ஏ ஆர் முருகதாஸ் ..!! அப்ப படம் சூப்பர் ஹிட் தான் ..!!

தற்போது நடிகர் சிவகார்த்திகேயனின் மார்க்கெட் உச்சத்தில் இருந்து வருகிறது என்று தான் சொல்ல வேண்டும் . அடுத்தடுத்து பல தரமான இயக்குனர்களுடன் கூட்டணி அமைக்க உள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன் . அந்த வகையில் தற்போது இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகி வரும் எஸ்கே 21 என்ற படத்தில் பிஸியாக நடித்துக்கொண்டு வருகிறார் நடிகர் சிவகார்த்திகேயன் .

பின்னர் இந்த  படத்தை முடித்த கையோடு இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் இயக்க உள்ள பிரம்மாண்ட படத்தில் நடிக்க இருக்கிறார் சிவகார்த்திகேயன்.  இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்க வைக்க பூஜா ஹெக்டே , மிருணாள் தாகூர் போன்ற நடிகைகளிடம்,

பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர் . ஆனால் இவர்கள் யாருமே  சம்மதம் தெரிவிக்காததால் தற்போது சிவகார்த்திகேயனுக்காக சூப்பர் ஹீரோயினை புக் செய்துள்ளார் ஏ ஆர் முருகதாஸ்.  அவர் வேறு யாரும் இல்லை நடிகை ருக்மிணி வசந்த் தான் .  சமீபத்தில் வெளியான சப்த சாகரதாச்சே எல்லோ,

என்ற படத்தின் மூலம் பட்டித் தொட்டி எங்கும் பிரபலமானார் . இந்தப் படத்தை பார்த்த பிறகு பல பேர் ருக்மிணி வசந்தின் தீவிர ரசிகர்களாக மாறிவிட்டனர் . அந்த அளவிற்கு தன்னுடைய தரமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார் நடிகை ருக்மிணி வசந்த் . இதை அடுத்து தற்போது இவர்,

விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் புதிய படத்திலும் கதாநாயகியாக நடித்திருக்கிறார் . இதைத்தொடர்ந்து அடுத்ததாக சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாக உள்ள புதிய படத்தில் கமிட்டாகி இருக்கிறார் ருக்மிணி வசந்த்.  இதனால் இந்த படத்திற்கு இப்போது எதிர்பார்ப்பு எகிறி உள்ளது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *