May 2, 2024

ஜெ யிலர் பட ம் நல் லாரு க்கா..?? நல் லாயில் லை யா..?? முத ல் விமர் சன த்தை போ ட்ட அனி ருத் ..!! என் ன இ வரே இப் படி சொ ல்லிட்டா ரு ..?? குழ ப்பத் தில் ரசிகர் க ள் ..!!

தற்போது இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவான திரைப்படம் தான் ஜெயிலர் . இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் இணைந்து சிவராஜ்குமார் ,மோகன்லால் ,ஜாக்கிசரஃப் ,விநாயகன் ,ரம்யா கிருஷ்ணன் ,தமன்னா ,வசந்த் ரவி, சுனில் , யோகி பாபு என்று ஒரு முன்னணி நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர் .

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவான இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார் . மேலும் சமீப காலமாக சூப்பர் ஸ்டாரின் நடிப்பில் வெளியான தர்பார் மற்றும் அண்ணாத்த  போன்ற திரைப்படங்கள் பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை . இதனால் இந்த படத்தை மலை போல் நம்பி இருக்கிறார்,

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள்.  இந்த திரைப்படம் வருகின்ற பத்தாம் தேதி திரையர ங்குகளில் வெளியாக இருக்கிறது.  இப்படி இருக்கும் நிலையில் இந்த படத்தை பார்த்த இசையமைப்பாளர் அனிருத் தன்னுடைய முதல் விமர்சனத்தை பகிர்ந்துள்ளார்.

அந்த வகையில் ஜெயிலர்  படம் தீயாக இருக்கும் என்று தன்னுடைய சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்து இருந்தார் அனிருத் . ஆனால் சில வருடங்களுக்கு முன்பு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வெளியான தர்பார் படத்திற்கும் இதே மாதிரி தான் பதிவு போட்டிருந்தார் ,

இசையமைப்பாளர் அனிருத் . ஆனால் அந்த திரைப்படம் மிகப்பெரிய தோல்வி படமாக அமைந்தது . அப்படி இருக்கும்போது ஜெயிலர் படத்திற்கும் அதே மாதிரி தான் பதிவு போட்டதால் படம் நல்லாருக்கா நல்லாயில்லையா என்று குழப்பத்தில் உள்ளனர் ரசிகர்கள் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *