May 3, 2024

யார் யாருக்கோ வாய்ப்பு கொடுக்குறீங்க..!! விஜய்க்கும் ஒரு வாய்ப்பு கொடுத்து பாருங்க ..!! மக்களுக்கு கோரிக்கை வைத்த பிரபல நடிகை ..!!

நடிகர் விஜய் இன்னும் இரண்டு படங்கள் நடித்த முடித்த பிறகு முழுநேர அரசியலில் களம் இறங்குவார் என்ற அதிகாரப்பூர்வ தகவலே வெளியாகி உள்ளது . மேலும் விஜய் கட்சி தொடங்கிய நாளிலிருந்தே  வாழ்த்துக்களை விட விமர்சனங்களை தான் அதிகம் சந்தித்து வருகிறார் . இப்படி இருக்கும் நிலையில் யார் யாருக்கோ வாய்ப்பு கொடுக்குறீங்க , விஜய்க்கும் ஒரு வாய்ப்பு கொடுத்து பாருங்க என்று,

மக்களுக்கு கோரிக்கை வைத்துள்ளார் பிரபல நடிகை ஒருவர் . அவர் வேறு யாருமில்லை நடிகை வாணி போஜன் தான் . ஆரம்பத்தில் சீரியலில் கலக்கிக்கொண்டு வந்த வாணி போஜன் ஓ மை கடவுளே என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு நடிகையாக அறிமுகமானார்.

பின்னர் இந்த படத்தை தொடர்ந்து ராம ஆண்டாலும் , ராவண ஆண்டாலும்,  மிரள், பாயும்புலி நீ எனக்கு, லவ் போன்ற பல படங்களில் நடித்திருந்தார் . இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் ஒரு விழாவிற்கு வந்திருந்த வாணிபோஜனிடம் விஜய் அரசியலுக்கு வருவது,

குறித்து கேள்வி எழுப்பி உள்ளனர் . அதற்கு பதிலளித்த வாணி போஜன் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் , விஜய் சாரும்  அரசியலுக்கு கண்டிப்பாக வரட்டும் , அவருக்கும் ஒரு வாய்ப்பு கொடுத்து பாருங்க , அப்பதான் தெரியும் அவர் என்ன பண்றாருன்னு ,

எல்லாமே நம்ம கையில் தான் இருக்கிறது என்றும் எனக்கும் கூட அரசியலுக்கு வருவதற்கு ஆசை இருக்கிறது என்று  கூறியிருந்தார் நடிகை வாணி போஜன்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *