May 2, 2024

பிக்பாஸ் வீட்டுக்கு வரும் அஜித்தின் நண்பர் ..!! எதிர்பார்ப்பை எகிற வைக்கும் வைல்டு கார்டு என்ட்ரி ..!! என்ன நடக்கப்போகுதோ தெரியல ..??

தற்போது விஜய் தொலைகாட்சியில் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது  . மேலும் இந்த சீசனில் போட்டியாளர்களுக்கிடையே அடிக்கடி சண்டை ஏற்படுகிறது . இதனாலேயே பிக் பாஸ் நிகழ்ச்சி டிஆர்பி யில் சக்கை போடு போட்டு வருகிறது.  இப்படி இருக்கும் நிலையில் வைல்டு கார்டு என்ட்ரியாக அஜித்தின் நண்பர் பிக் பாஸ் வீட்டிற்குள் வர இருக்கிறாராம்.

அவர் வேறு யாருமில்லை நடிகர் பப்லு பிரித்விராஜ்  தான் . ஆரம்பத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த நடிகர பப்லு பிரித்விராஜ். பின்னர் ஒரு கட்டத்தில் ஹீரோ ,வில்லன் ,குணச்சித்திர கதாபாத்திரம் என்று நடித்துக் கொண்டு வந்தார் . மேலும் இவர் தமிழ் மொழி மட்டுமில்லாமல்,

தெலுங்கு ,மலையாளம் , கன்னடம் மற்றும் ஹிந்தி மொழி படங்களிலும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.  இப்படி வெள்ளித்திரையில் கலக்கிக் கொண்டு வந்த நடிகர் பப்லு பிரித்விராஜ் சின்னத்திரையில் ஒளிபபரப்பான மர்ம தேசம் ,ரமணி vs ரமணி, வாணி ராணி ,

அன்பே வா போன்ற பல சீரியல்களில் நடித்திருக்கிறார் . குறிப்பாக அஜித் நடிப்பில் வெளியான அவள் வருவாளா படத்தில் வில்லனாக நடித்திருந்தார் நடிகர் பப்லு பிரித்விராஜ். இதனால் அப்போதிலிருந்து இப்போது வரை அஜித்துக்கு ஒரு நல்ல நண்பனாக இருந்து வருகிறார் ,

நடிகர் பப்லு பிரித்விராஜ் . இப்படி இருக்கும் நிலையில் பிக் பாஸ் சீசன் 7ல் வைல்டு கார்டு போட்டியாளராக பிக் பாஸ் வீட்டிற்குள் வர இருக்கிறாராம் நடிகர் பப்லு பிரித்விராஜ் . இதனால் கண்டிப்பாக பிக் பாஸ் வீடு சூடு பிடிக்கும் என்று கூறப்படுகிறது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *