April 29, 2024

சினிமாவில் நடிக்கவில்லை என்றாலும் ..!! பல கோடி சொத்து சேர்த்து வைத்திருக்கும் ஷாலினி ..!! அடேங்கப்பா, இத்தனை கோடியா ..??

ஷாலினி ஓர் தமிழ் திரைப்பட நடிகை ஆவார்.  கடந்த 1983 ஆம் ஆண்டு வெளியான ஆனந்த கும்மி என்ற படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார் ஷாலினி . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து பல திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார் . பின்னர் கடந்த 1997 ஆம் ஆண்டு வெளியான காதலுக்கு மரியாதை என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமானார் நடிகை ஷாலினி.

பின்னர் இந்த படத்தை தொடர்ந்து அஜித் நடிப்பில் வெளியான அமர்க்களம் ,விஜய் நடிப்பில் வெளியான கண்ணுக்குள் நிலவு ,மாதவன் நடிப்பில் வெளியான அலைபாயுதே, பிரசாந்த் நடிப்பில் வெளியான பிரியாத வரம் வேண்டும் போன்ற படங்களில் நடித்திருந்தார்  நடிகை ஷாலினி .

இதனிடையே அமர்க்களம் படத்தில் நடிக்கும் போது அஜித்துடன் ஷாலினிக்கு காதல் ஏற்பட்டுள்ளது.  பின்னர் இருவரும் திருமணமும் செய்து கொண்டனர்.  திருமணமான இவர்களுக்கு ஒரு மகள் ,ஒரு மகன் உள்ளனர் . மேலும் திருமணத்துக்கு பிறகு நடிப்பதையே  நிறுத்திக் கொண்டார்,

நடிகை ஷாலினி . ஆனால் ஷாலினி தற்போது சினிமாவில் நடிக்கவில்லை என்றாலும் , பல கோடி சொத்து சேர்த்து வைத்திருக்கிறாராம் . அந்த வகையில் நடிகை ஷாலினியின் மொத்த சொத்து மதிப்பு சுமார் 50 கோடிக்கு மேல் இருக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது .

அதோடு ஒரு சில சொகுசு கார்களையும் வைத்திருக்கிறாராம் நடிகை ஷாலினி. இந்த தகவல் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி  வருகிறது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *