April 27, 2024

விவா கரத் துக்கு முன் பு தனு ஷ் ஐஸ்வ ர்யா எடுத் துக்கொ ண்ட புகைப் படங் கள் உ ள் ளே ..!!

தனுஷ் ஒரு பிரபலமான தமிழ் திரைப்பட நடிகர், இயக்குனர் ,தயாரிப்பாளர் மற்றும் பாடலாசிரியர் ஆவார் . இயக்குனர் கஸ்தூரிராஜாவின் இளைய மகனான தனுஷ் கடந்த 2002 ஆம் ஆண்டு செல்வராகவன் இயக்கத்தில் வெளியான துள்ளுவதோ இளமை என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். பின்னர் இந்த படத்தை தொடர்ந்து காதல் கொண்டேன் ,திருடா திருடி, தேவதையை கண்டேன், புதுப்பேட்டை, பொல்லாதவன், யாரடி நீ மோகினி,

படிக்காதவன் ,உத்தமபுத்திரன் , ஆடுகளம் போன்ற பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டார் நடிகர் தனுஷ் . மேலும் நடிகர் தனுஷ் தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் , ஹிந்தி மற்றும் ஆங்கில மொழி படங்களிலும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது .

இதனிடையே கடந்த 2004 ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யாவை திருமணம் செய்து கொண்டார் நடிகர்  தனுஷ்.  திருமணமான இவர்களுக்கு யாத்ரா லிங்கா என்ற இரண்டு மகன்கள் உள்ளனர் . மேலும் திருமணமாகி 18 வருடங்கள் இருவரும் ஒன்றாக வாழ்ந்து வந்த நிலையில் கடந்த வருடம் ,

இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர்.  இப்படி இருக்கும் நிலையில் விவாகரத்துக்கு முன்பு இருவரும் ஒன்றாக இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. இதோ அந்த புகைப்படங்கள் நீங்களும் பாருங்க …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *