April 28, 2024

மார்க் ஆண்டனி ஹிட்டான நேரம்..!! பிரபல நடிகரின் மகளை கரம்பிடிக்கும் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன்..!! 32 வயதில் கைக்கூடிய திருமணம் ..!!

ஆதிக்  ரவிச்சந்திரன் ஒரு பிரபலமான தமிழ் திரைப்பட இயக்குனர் மற்றும் நடிகர் ஆவார் . கடந்த 2015 ஆம் ஆண்டு ஜி வி பிரகாஷ்குமார் நடிப்பில் வெளியான திரிஷா இல்லைனா நயன்தாரா என்ற படத்தின் மூலம் இயக்குனர் அவதாரம் எடுத்தார் ஆதிக் ரவிச்சந்திரன் . இப்படி வெளியான முதல் திரைப்படமே இவருக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து சிம்புவை வைத்து ,

அன்பானவன் அசராதவன் அடங்காதவன்,  பிரபுதேவாவை  வைத்து பஹீரா போன்ற படங்களை இயக்கியிருந்தார் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் .  ஆனால் இந்த இரண்டு திரைப்படமுமே மிகப்பெரிய தோல்வி படமாக அமைந்தது . இதன் பிறகு விஷாலை வைத்து ,

இவர் இயக்கிய மார்க் ஆண்டனி  திரைப்படம் சூப்பர் ஹிட் படமாக அமைந்தது மட்டுமல்லாமல் 100 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது . மேலும் இயக்குனராக பரிச்சயமான ஆதிக் ரவிச்சந்திரன் தமிழில் வெளியான k-13 ,நேர்கொண்ட பார்வை ,கோப்ரா ,

போன்ற படங்களிலும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது . இப்படி இருக்கும் நிலையில் 32 வயதான இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் பிரபல தமிழ் நடிகரின் மகளை விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போகிறாராம் . ஆனால் அந்த நடிகர் யார் என்ற தகவல் மட்டும்,

இன்னும் வெளியாகவில்லை . இதை பார்த்த ரசிகர்கள் எல்லாம் மார்க் ஆண்டனி ஹிட்டான நேரம் என்று கூறி வருகின்றனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *