April 27, 2024

இனிமேல் சூரியை யாரும் காமெடி பீஸ்னு சொல்ல மாட்டாங்க ..!! அடுத்த படத்தின் போஸ்டரை பார்த்து மிரண்டுபோன ரசிகர்கள் ..!!

சூரி ஓர் பிரபலமான தமிழ் திரைப்பட காமெடி நடிகர் ஆவார்.  ஆரம்பத்தில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்த சூரி கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியான வெண்ணிலா கபடி குழு என்ற படத்தின் மூலம் பெரிய அளவில் பிரபலமானார் . குறிப்பாக இந்த படத்தில் இவர் 50 புரோட்டா சாப்பிடும் காட்சி இன்றளவும் பிரபலம் என்று தான் சொல்ல வேண்டும்.  பின்னர் இந்த படத்தைத் தொடர்ந்து நான் மகான் அல்ல ,

அழகர்சாமியின் குதிரை ,வேலாயுதம் ,மனம் கொத்திப் பறவை ,சுந்தரபாண்டியன் ,கேடி பில்லா கில்லாடி ரங்கா ,வருத்தப்படாத வாலிபர் சங்கம், பாண்டியநாடு , ஜில்லா போன்ற பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து  தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டார் நடிகர் சூரி .

இப்படி காமெடியனாக கலக்கி கொண்டு வந்த சூரி வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான விடுதலை என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார் . இந்த திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய அங்கீகாரத்தை பெற்றுத்தந்தது .  இதையடுத்து தற்போது கொட்டுக்காளி ,

ஏழு கடல் ஏழுமலை போன்ற படங்களிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் நடிகர் சூரி . அந்த வகையில் சமீபத்தில் இந்த படங்களின் போஸ்டர் வெளியாகி சினிமா பிரபலங்களையே வியப்பில் ஆழ்த்தியுள்ளது . இதைப்பார்த்த ரசிகர்கள் இனிமேல் சூரியை ,

யாரும் காமெடி பீஸ் என்று சொல்ல வாய்ப்பே கிடையாது என்று கூறிவருகின்றனர் . இந்த தகவல் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *