April 29, 2024

ராகவா லாரன்ஸை ஹீரோவாக்கிய இயக்குனர் திடீர் மரணம் ..!! சோகத்தில் வாடும் குடும்பத்தினர் ..!! இரங்கலை தெரிவிக்கும் பிரபலங்கள் ..!!

தற்போது தமிழ் சினிமா உலகில் ஒரு தவிர்க்க முடியாத பிரபலமாக இருந்து வருபவர் நடிகரும்,  இயக்குனருமான ராகவா லாரன்ஸ்.  ஆரம்பத்தில் குரூப் டான்ஸராக இருந்து வந்த ராகவா லாரன்ஸை ஹீரோவாக அறிமுகப்படுத்தியது இயக்குனர் அற்புதன் தானாம் . கடந்த 2002 ஆம் ஆண்டு இயக்குனர் அற்புதன்  இயக்கத்தில் உருவான அற்புதம் என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார் ராகவா லாரன்ஸ் .

இந்த திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது.  இதன் பிறகு தான் ராகவா லாரன்ஸுக்கு பல பட வாய்ப்புகள் குவிந்தது. இந்நிலையில் ராகவா லாரன்ஸை அறிமுகப்படுத்திய இயக்குனர் அற்புதன் திடீரென இறந்து  விட்டாராம் . 52 வயதாகும் இயக்குனர் அற்புதன் ,

விபத்தில் காயமடைந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தாராம்.  இப்படி இருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி  இறந்து விட்டாராம் இயக்குனர் அற்புதன்  . இவருடைய  திடீர் மரணத்திற்கு ரசிகர்களும் பிரபலங்களும் தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகின்றனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *