April 24, 2024

விஜய்யின் கடைசி படத்திற்கு இத்தனை கோடி சம்பளமா ..?? கேட்டாலே தலை சுத்துது ..!! அரசியல் என்ட்ரியால் பல மடங்கு உயர்ந்த சம்பளம் ..!!

தற்போது நடிகர் விஜய் “தமிழக வெற்றி கழகம்”  என்ற தன்னுடைய புதிய கட்சியின் பெயரை சில தினங்களுக்கு முன்பு அறிவித்திருந்தார்.  அப்போதிலிருந்து இவருக்கு வாழ்த்துக்களும் , விமர்சனங்களும் குவிந்த வண்ணம் உள்ளது . மேலும் நடிகர் விஜய் இன்னும் இரண்டு படங்களில் நடித்து பிடித்த பிறகு முழு நேர அரசியலில் ஈடுபடுவார் என்று தகவல் வெளியானது.  அந்த வகையில் தற்போது இயக்குனர் வெங்கட் பிரபு,

இயக்கத்தில் உருவாகி வரும் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் என்ற படத்தில் பிசியாக நடித்துக்கொண்டு வருகிறார் நடிகர் விஜய்.  இந்த படத்தில் விஜய் உடன் இணைந்து பிரசாந்த் ,பிரபுதேவா ,மைக் மோகன், அஜ்மல் ,சினேகா ,லைலா ,மீனாட்சி போன்ற பல பிரபலங்கள் ,

நடித்து வருகின்றனர்.  இந்த படத்தில் விஜய் இரட்டை வேடங்களில் நடித்துக்கொண்டு வருகிறார் . இதை முடித்த கையோடு விஜயின் 69 ஆவது படத்தை எச் வினோத் அல்லது கார்த்திக் சுப்புராஜ் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  இந்த படத்தை பிரபல தெலுங்கு தயாரிப்பு ,

நிறுவனமான டி வி வி என்டர்டெயின்மென்ட் தயாரிக்க உள்ளது.  இவர்கள் இதற்கு முன்பு ராஜமௌலி  இயக்கத்தில் வெளியான ஆர் ஆர் ஆர் படத்தை தயாரித்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது . மேலும் விஜய்யின் கடைசி படம் என்பதால் இந்த படத்திற்கு ,

250 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளது . தற்போது கோட் படத்திற்காக 150 கோடி சம்பளம் வாங்கி வந்த விஜய் அரசியலுக்கு வர உள்ளதால் அவருடைய சம்பளம் பல மடங்கு உயர்ந்துள்ளது . ஆனால் இந்த தகவல் உண்மையா என்று இன்னும் தெரியவில்லை…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *