April 29, 2024

அசையா சொத்தே 92 கோடி ..!! அப்ப அசையும் சொத்து இத்தனை கோடியா ..?? வாய்ப்பிளக்க வைக்கும் கமல்ஹாசனின் சொத்து மதிப்பு ..!!

தமிழ் திரை உலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இன்று இந்திய அளவில் ஒரு பிரபலமான நடிகராக இருந்து வருகிறார் கமல்ஹாசன்.  அந்த வகையில் களத்தூர் கண்ணம்மா என்ற படத்தின் மூலம் தன்னுடைய திரைப்பயணத்தை தொடங்கிய கமல்ஹாசன் குறிப்பிட்ட காலகட்டத்திலேயே தன்னுடைய திறமையான நடிப்பால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார் . குறிப்பாக படத்திற்கு படம்,

வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து உலக நாயகன் என்ற அந்தஸ்தையும் பெற்றார் கமல்ஹாசன்.  இதன்பிறகு அரசியலில் களம் இறங்கி மிகப்பெரிய தோல்வியை சந்தித்த கமலுக்கு பல வருடங்களாக எந்த ஒரு படங்களும் கை கொடுக்கவில்லை.

இதன் பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான விக்ரம் திரைப்படம் கமலுக்கு மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது என்று தான் சொல்ல வேண்டும் . இதைத் தொடர்ந்து இந்தியன் 2 , தக்லைப்,  கல்கி என்று அடுத்தடுத்த படங்களின் பிசியாக ,

நடித்துக்கொண்டு வருகிறார் கமல்ஹாசன் . இப்படி இருக்கும் நிலையில் கமல்ஹாசனின் மொத்த சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது . அந்த வகையில் கமல்ஹாசனின் அசையா சொத்து 92 கோடி இருக்கும் என்று கூறப்படுகிறது.  அப்படி பார்த்தால்,

அவருடைய ஆசையும் சொத்து 350 கோடிக்கு மேல் இருக்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது . அதுமட்டுமல்லாமல் விலை உயர்ந்த சொகுசு கார்களையும் கமல்ஹாசன் வைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *