April 27, 2024

அப்பாவான “குக் வித் கோமாளி” புகழ் ..!! என்ன குழந்தை தெரியுமா ..?? அவரே வெளியிட்ட பதிவு ..!! வாழ்த்து மழையில் ரசிகர்கள் ..!!

விஜய் தொலைக்காட்சியால் கண்டுபிடிக்கப்பட்ட தரமான கலைஞர்களில் ஒருவர்தான் புகழ் . ஆரம்பத்தில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான புகழ் ,  குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியின் மூலம் ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களையும் கவர்ந்து விட்டார் என்று தான் சொல்ல வேண்டும் . குறிப்பாக இந்த நிகழ்ச்சி இவரை பட்டிதொட்டியெங்கும் ,

பிரபலமாக்கியது.  இதன் பிறகு தான்  இவருக்கு படங்களில் நடிக்கும் வாய்ப்பும் அமைந்தது . அந்த வகையில் சிக்ஸர் ,சபாபதி ,என்ன சொல்லப் போகிறாய், வலிமை, எதற்கும் துணிந்தவன், யானை ,அயோத்தி ,ஆகஸ்ட் 16 1947 போன்ற பல திரைப்படங்களில் நடித்து அசத்தியிருந்தார் ,

நடிகர் புகழ் . அதுமட்டுமில்லாமல் மிஸ்டர் ஜூ கீப்பர் என்ற படத்தில் ஹீரோவாகவும் நடித்துகொண்டு வருகிறார் புகழ் . இதனிடையே கடந்த வருடம் தன்னுடைய நீண்ட நாள் காதலியான பென்சி என்பவரை திருமணம் செய்து கொண்டார் புகழ் . சமீபத்தில் தான் புகழின் மனைவியான,

பென்சி கர்ப்பமாக இருந்தார் . அவருடைய வளைகாப்பை கோலாகலமாக நடத்தி இருந்தார் புகழ் .  இப்படி இருக்கும் நிலையில் புகழ் – பென்சி தம்பதிக்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளதாம்.  இந்த சந்தோசமான செய்தியை ” தாயும் சேயும் நலம் ” என்று தன்னுடைய ,

சமூக வலைத்தளங்களில் புகைப்படத்தோடு  வெளியிட்டுள்ளார் குக் வித் கோமாளி புகழ் . இதைப் பார்த்த ரசிகர்கள் புகழ் – பென்சி தம்பதிக்கு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்…

 

 

View this post on Instagram

 

A post shared by Vijay Tv Pugazh (@vijaytvpugazh)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *