April 29, 2024

ஏற்கனவே ஒல்லியாக இருக்கும் திரிஷா ..!! அஜித்துக்காக இன்னும் உடல் எடையை குறைக்கிறாரா ..?? வேண்டவே வேண்டாம் என்று கதறும் ரசிகர்கள் ..!!

தற்போது தமிழ் சினிமாவை கலக்கி வரும் டாப் நடிகைகளில் ஒருவர் தான் நடிகை திரிஷா . பொன்னியின் செல்வன் படத்திற்குப் பிறகு இவருடைய மார்க்கெட் உச்சத்தில் இருந்து வருகிறது என்று தான்  சொல்ல வேண்டும் . அப்படி சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியான லியோ படத்திலும் கதாநாயகியாக நடித்திருந்தார் நடிகை திரிஷா . இதை அடுத்து அடுத்ததாக இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் ,

அஜித்துடன் இணைந்து விடாமுயற்சி படத்தில் நடித்து கொண்டு வருகிறார் நடிகை திரிஷா.  ஏற்கனவே இவர்களுடைய கூட்டணியில் வெளியான கிரீடம் ,என்னை அறிந்தால், மங்காத்தா போன்ற படங்கள் சூப்பர் ஹிட் படங்களாக அமைந்தது . இதையடுத்து ஐந்தாவது முறையாக இருவரும்,

இணைந்துள்ளனர் . இதனால் இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.  இப்படி இருக்கும் நிலையில் இந்த படத்திற்காக உடல் எடையை பாதியாக குறைக்க உள்ளாராம் நடிகை திரிஷா . அந்த வகையில் விடாமுயற்சி படத்தில் அஜித் இரட்டை வேடங்களில் நடிக்கிறாராம்.

அதில் ஒரு அஜித்துக்கு ஜோடியாக நடிகை திரிஷா நடித்த உள்ளாராம் . குறிப்பாக இவர்கள் இருவருக்கும் கல்லூரியில் நடப்பது போன்ற காதல் காட்சிகள் உள்ளதாம் . இதனால் அஜித்தை டி ஏஜிங் தொழில்நுட்பத்தில் காட்ட உள்ளார்களாம். இதனால் திரிஷாவை உடல் எடையை பாதியாக,

குறைக்க சொல்லி இருக்கிறாராம் இயக்குனர் . ஏற்கனவே ஒல்லியாக இருக்கும் திரிஷா இன்னும் ஒல்லியானால் நன்றாக இருக்குமா.?  இந்த ரிஸ்க்கே வேண்டாம் என்று ரசிகர்கள் கதறி வருகின்றனர் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *