April 29, 2024

சில்க் ஸ்மிதாவிற்கே டப் கொடுக்கும் “பிக்பாஸ்” விசித்ராவின் இளம் வயது புகைப்படங்கள் ..!!

தற்போது பிக் பாஸ் சீசன் 7 போட்டியாளராக கலக்கி கொண்டு வருபவர் தான் நடிகை விசித்ரா.  கடந்த 1991 ஆம் ஆண்டு வெளியான போர் கொடி என்ற படத்தின் மூலம் தன்னுடைய திரை பயணத்தை தொடங்கினார் நடிகை விசித்ரா.  பின்னர் இந்த படத்தை தொடர்ந்து தலைவாசல் ,தேவர் மகன் ,அமராவதி, ரசிகன், வீரா, வண்டி சோலை சின்ராசு ,அமைதிப்படை ,வில்லாதி வில்லன் ,முத்து,

ரகசிய போலீஸ் ,பெரிய குடும்பம் , எட்டுப்பட்டி ராசா போன்ற பல திரைப்படங்களில் நடித்திருந்தார் நடிகை விசித்ரா.  குறிப்பாக இவர் பெரும்பாலும் தமிழ் படங்களில் கவர்ச்சி நடிகையாகவும்,  ஐட்டம் டான்ஸ் நடிகையாகவும் கலக்கிக் கொண்டு வந்தார் . மேலும் நடிகை விசித்ரா,

தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு,  மலையாளம் மற்றும் கன்னட மொழி படங்களிலும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.  இப்படி வெள்ளித்திரையில் கலக்கி கொண்டு வந்த விசித்ரா ஒரு கட்டத்தில் திருமணமான பிறகு சின்னத்திரை சீரியல்களிலும் நடித்து வந்தார் .

இப்படி இருக்கும் நிலையில் இளம் வயதில் சில்க் ஸ்மிதாவிற்கே  டப் கொடுக்கும் வகையில் இருந்திருக்கிறார் நடிகை விசித்ரா . அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தை கலக்கி கொண்டு வருகிறது . இதோ அந்த புகைப்படங்களை நீங்களும் பாருங்க…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *