May 7, 2024

கல்யாணமாகி 8 வருஷமாச்சு ..!! இன்னும் குழந்தையே இல்லை ..!! காரணத்தை சொல்லிய பாக்யராஜின் மகன் ..!!

இயக்குனரும்,   நடிகருமான பாக்யராஜின் மகன் தான் சாந்தனு.  கடந்த 2008 ஆம் ஆண்டு வெளியான சக்கரகட்டி என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார்  நடிகர் சாந்தனு . இந்த படம் இவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுத்தந்தது . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து சித்து பிளஸ் டூ ,கண்டேன், ஆயிரம் விளக்கு ,அம்மாவின் கைப்பேசி, வாய்மை, கோடிட்ட இடங்களை நிரப்புக, முப்பரிமாணம் ,

முருங்கக்காய் சிப்ஸ் போன்ற பல படங்களில் நடித்திருந்தார். இருந்தாலும் இவருக்கு எந்த ஒரு படமும் பெரிய அளவில் வரவேற்பை பெற்றுத் தரவில்லை.  ஆனால் சமீபத்தில் வெளியான ப்ளூ ஸ்டார் திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய அங்கீகாரத்தை பெற்றுத் தந்துள்ளது.

இதனிடையே கடந்த 2015 ஆம் ஆண்டு தொகுப்பாளினி கீர்த்தி என்பவரை திருமணம் செய்து கொண்டார் நடிகர்  சாந்தனு . திருமணமான இவர்களுக்கு 8 வருடங்களாக குழந்தை இல்லாமல் இருந்து வருகிறது.  இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட,

சாந்தனு மற்றும் கீர்த்தி இது குறித்து வெளிப்படையாக பேசியிருந்தனர்.  அதில், நாங்கள் எந்த திருமணத்திற்கு சென்றாலும் முதலில் குழந்தை எப்ப என்று தான் கேட்பார்கள்.  நாங்கள் இப்போதுதான் கேரியரில் கவனம் செலுத்தி வருகிறோம்.  நாங்கள் குழந்தையை ,

பெற்றுக்கொள்ளக்கூடாது என்று முடிவு செய்யவில்லை . எது வர வேண்டுமோ  அது சரியான நேரத்தில் வரும் என்று அந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்திருந்தனர் சாந்தனு மற்றும் கீர்த்தி…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *