April 29, 2024

“பூவே உனக்காக” விஜய்யின் ஒரு தலை காதலியா இது ..?? 45 வயதில் எப்படி இருக்கிறார் பாருங்க ..!! வெளிவந்த லேட்டஸ்ட் புகைப்படங்கள் ..!!

தமிழ் சினிமா உலகில் கடந்த 1996 ஆம் ஆண்டு இயக்குனர் விக்ரமன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் பூவே உனக்காக . இந்த திரைப்படம் சூப்பர் ஹிட் படமாக அமைந்தது . இந்த படத்தில் விஜயின் ஒரு தலை காதலியாக நடித்திருந்தவர் தான் நடிகை அஞ்சு அரவிந்த்.இந்த திரைப்படம் இவருக்கு பெரியளவில் வரவேற்பை பெற்றுத்தந்தது என்று தான் சொல்ல வேண்டும் .

ஆரம்பத்தில் மலையாள படங்கள் மூலம் கலக்கிக்கொண்டு வந்த அஞ்சு அரவிந்த் பூவே உனக்காக என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார் . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து அருணாச்சலம் ,ஒன்ஸ்மோர், ஆசை தம்பி ,உன்னருகே நானிருந்தால் ,வானத்தைப்போல,

வாஞ்சிநாதன் ,கண்ணா உன்னை தேடுகிறேன் போன்ற படங்களில் நடித்திருந்தார் . மேலும் இவர் தமிழ் மொழியை விட அதிகம் மலையாள மொழி படங்களில் தான் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.  இதனிடையே திருமணமான அஞ்சு அரவிந்துக்கு ஒரு மகளும் இருக்கிறார்.

இப்படி இருக்கும் நிலையில் 45 வயதாகும் அஞ்சு அரவிந்தின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.  இதை பார்த்த ரசிகர்கள் பூவே உனக்காக படத்தில் வரும் நடிகையா இது .? ஆளே அடையாளம் தெரியலையே என்று கூறி வருகின்றனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *