April 22, 2024

நடி க்க மாட் டேன் என் று சொ ல்லிவி ட்டு ..!! மீ ண் டும் நடி க்க வரு ம் உத யநிதி ..!! ச ரியா ன நே ரம் பார் த்து ஆ சை யை தூண் டி விட் ட க மல் ..!!

தமிழ் சினிமா உலகில் தயாரிப்பாளர்,  நடிகர் என்று கலக்கிக் கொண்டு வந்தவர் நடிகர் உதயநிதி ஸ்டாலின்.  தயாரிப்பாளராக தன்னுடைய திரை பயணத்தை தொடங்கிய உதயநிதி ஸ்டாலின் ஒரு கல் ஒரு கண்ணாடி என்ற படத்தின்  மூலம் ஹீரோவாக அறிமுகமானார் . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து பல திரைப்படங்களில்  நடித்து வந்த  உதயநிதி ஒரு கட்டத்தில் அரசியலில் களம் இறங்கியதால் மாமன்னன் தான் என்னுடைய கடைசி படம் ,

என்று கூறியிருந்தார் . அப்படி சொன்னது போலவே மாமன்னன் படத்திற்கு பிறகு எந்த படத்திலும் நடிக்காமல் இருந்து வந்தார் உதயநிதி ஸ்டாலின் . இப்படி இருக்கும் நிலையில் புதிய படத்தில் கமிட்டாகி  உள்ளாராம்  உதயநிதி ஸ்டாலின் . அந்த வகையில் கமல்ஹாசன் தயாரிப்பில் கிடாரி படத்தின் இயக்குனரான ,

பிரசாந்த் முருகேசன் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடிக்க இருக்கிறாராம் உதயநிதி ஸ்டாலின்.  அதில் அவர் நடிப்பதற்கு  காரணமே அவருடைய தந்தை தானாம் . அதாவது இந்த படமே உதயநிதியின் தந்தையான மு க ஸ்டாலின் வாழ்க்கை வரலாறு தானாம் . குறிப்பாக இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலின் ,

முதலமைச்சராக  நடிக்க உள்ளார்  என்பது குறிப்பிடத்தக்கது . இதனால் கண்டிப்பாக இந்த படத்தில் உதயநிதி  ஸ்டாலின் ந டிப்பார் என்று தகவல் வெளியாகியுள்ளது . அதுமட்டுமில்லாமல் இவருடைய  முதலமைச்சர் ஆசையை தூண்டி விட்டு வேடிக்கை பார்த்திருக்கிறார் கமல்ஹாசன் .

மேலும் தற்போது உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக இருந்து வருவதால் சில மாதங்கள் கழித்து இந்த படத்தின் அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது . இந்த தகவல் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *