April 30, 2024

“அ தை ” குறை ப்பதற் காக நடி கை ஹன் சிகா ஆப்ரே ஷ ன் செய் தாரா ..?? வெளிப்ப டை யாக சொ ல்லிய நடி கை ..!! ஆ னா அவ ருக் கே அழ கே “அது ” தா ன் ..!!

ஹன்சிகா மோத்வானி ஒரு பிரபலமான தென்னிந்திய திரைப்பட நடிகை ஆவார்.  ஆரம்பத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த ஹன்சிகா தெலுங்கு படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் . இதன் பிறகு கடந்த 2011 ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான மாப்பிள்ளை என்ற படத்தின் மூலம் அறிமுகமானார் நடிகை ஹன்சிகா.  பின்னர் இந்த படத்தை தொடர்ந்து எங்கேயும் காதல் ,

வேலாயுதம், ஒரு கல் ஒரு கண்ணாடி ,சேட்டை, பிரியாணி ,மான் கராத்தே, அரண்மனை ,ஆம்பள , புலி , மனிதன் போன்ற பல திரைப்படங்களில் நடித்திருந்தார் . மேலும் தமிழ் ரசிகர்களால் “குட்டி குஷ்பூ” என்றும் அழைக்கப்பட்டு வந்தார் நடிகை ஹன்சிகா.  இதனிடையே தன்னுடைய நீண்ட நாள் ,

நண்பரான சோஹைல்  கத்துரியா என்பவரை கடந்த வருடம் திருமணம் செய்து கொண்டார் நடிகை ஹன்சிகா . மேலும் ஹன்சிகாவுக்கு அழகே  அவருடைய கொழுக் மொழுக் முகம் தான் . அப்படி பப்ளியாக இருந்த ஹன்சிகா சமீப காலமாக உடல் மெலிந்து ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறியிருக்கிறார். 

இப்படி இருக்கும் நிலையில் சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வரும் ஹன்சிகா அவ்வ போது ரசிகர்கள் கேட்கும் கேள்விக்கு பதில் அளித்து வருவார் . அப்படி ரசிகர் ஒருவர் உடல் எடையை குறைப்பதற்காக ஹன்சிகா ஆபரேஷன் செய்ததாக கூறியிருக்கிறார்.  இதற்கு பதில் அளித்த நடிகை ஹன்சிகா,

நான் இப்போது இருக்கும் தோற்றத்திற்காக கடினமாக உழைத்திருக்கிறேன் . மேலும் நான் யோகா பயிற்சியின் மூலம் தான் உடல் எடையை குறைத்தேன் , ஆப்ரேஷன் செய்து குறைக்கவில்லை . அதோடு யோகா பயிற்சி வெறுப்பையும் குறைக்க கற்றுக் கொடுக்கிறது என்று கூறியிருந்தார் நடிகை ஹன்சிகா…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *