April 30, 2024

இதை விட ஒரு இயக்குனருக்கு என்ன வேண்டும் ..!! வெளிநாட்டிலும் மாஸ் காட்டும் வெற்றிமாறன் ..!! விடுதலை படத்திற்கு இவ்வளவு வரவேற்பா ..??

தமிழ் கடந்த வருடம் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி , விஜய் சேதுபதி இணைந்து நடித்த திரைப்படம் தான் விடுதலை . இந்த படத்தில் சூரியும் , விஜய் சேதுபதியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர் . அதோடு இவர்களுடன் இணைந்து பவானி ஸ்ரீ ,கௌதம் வாசுதேவ் மேனன், ராஜீவ் மேனன் ,இளவரசு, பாலாஜி சக்திவேல், சரவண சுப்பையா, சேட்டன் போன்ற பல பிரபலங்கள் நடித்திருந்தனர்.

இந்தப் படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார் . மிகப்பெரிய எதிர்பார்ப்பில் உருவான இந்த படத்தின் முதல் பாகம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது என்று தான் சொல்ல வேண்டும்.  இன்னும் சொல்லப்போனால் கடந்த வருடம் வெளியான தரமான படைப்புகளில்,

விடுதலை படமும் இடம்பெற்றது. அந்த அளவிற்கு விடுதலை படத்தை செதுக்கி இயக்கி இருந்தார் வெற்றிமாறன் . இதை அடுத்து விடுதலை படத்தில் இரண்டாம் பாகம் விறுவிறுப்பாக உருவாகி வருகிறது.  இந்த திரைப்படமும் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படி இருக்கும் நிலையில் வருடா வருடம் நெதர்லாந்தில் நடக்கும் ரோட்டர் டேம் சர்வதேச திரைப்பட விழாவில் விடுதலை பாகம் 1 மற்றும் ரெண்டை திரையிட பட்டுள்ளது . இந்த இரண்டு பாகங்களையும் பார்த்த சினிமா ரசிகர்கள் எழுந்து நின்று பாராட்டியது மட்டுமல்லாமல்,

கிட்டத்தட்ட ஐந்து நிமிடங்கள் கைதட்டி கரவொலி எழுப்பி வெற்றிமாறனையும் படக்குழுவினர்களையும் சந்தோஷத்தில் வாழ்த்தி உள்ளனர். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தை கலக்கிக்கொண்டு வருகிறது…

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *