May 2, 2024

முன்னணி நடிகர்கள் கூட இப்படி செய்யல ..!! குழந்தைகளுக்காக சூரி செய்த விஷயம் ..!! வைரலாகும் புகைப்படங்கள் ..!!

சூரி ஓர் தவிர்க்க முடியாத தமிழ் திரைப்பட காமெடி நடிகர் மற்றும் கதாநாயகன் ஆவார் . ஆரம்பத்தில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்த சூரி வெண்ணிலா கபடி குழு என்ற படத்தில் 50 பரோட்டா சாப்பிட்டு ரசிகர்களிடையே பெரிய அளவில் பிரபலமானார்.  பின்னர் இந்த படத்தை தொடர்ந்து களவாணி , குள்ளநரி கூட்டம்,  மனம் கொத்தி பறவை, சுந்தரபாண்டியன் , வருத்தப்படாத வாலிபர் சங்கம் ,

போன்ற பல திரைப்படங்களில் காமெடியனாக நடித்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தார் . இப்படி காமெடி நடிகராக கலக்கி கொண்டு வந்த சூரி சமீபத்தில் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான விடுதலை என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாக இருந்தார்.

இதைத்தொடர்ந்து தற்போது ஹீரோவாக பல திரைப்படங்களில் கமிட்டாகி நடித்துக் கொண்டு வருகிறார் சூரி.  இப்படி இருக்கும் நிலையில் படப்பிடிப்பிற்காக சென்றிருந்த சூரியை பார்த்ததும் குழந்தைகள் அவரை சூழ்ந்தனர் . பின்னர் அவருடைய கேரவனுக்குள் போவதற்கு,

அந்த குழந்தைகள் ஆசை பட்டுள்ளனர்.  உடனே சூரியம் அவர்களை உள்ளே அழைத்து சென்று அவர்களை மகிழ்வித்து இருக்கிறார்.  மேலும் முன்னணி நடிகர்கள் கூட இப்படி செய்திருக்க மாட்டார்கள்.  இந்நிலையில் அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *