April 28, 2024

அஜித்துக்கு என்ன தான் ஆச்சு ..!! மீண்டும் அந்த இயக்குனருடன் கூட்டணியா ..?? வேண்டவே வேண்டாம் என்று கதறும் அஜித் ரசிகர்கள் ..!!

தற்போது தமிழ் சினிமாவை கலக்கி வரும் டாப் நடிகர்களில் ஒருவர் தான் நடிகர் அஜித் குமார்.  தற்போது இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாக்கி வரும் விடாமுயற்சி என்ற படத்தில் பிசியாக நடித்துக்கொண்டு வருகிறார் அஜித்.  இந்த படத்தில் அஜித்துடன் இணைந்து அர்ஜுன் ,திரிஷா, ரெஜினா, ஆரவ் போன்ற பல பிரபலங்கள் நடித்து வருகின்றனர் . இந்த படத்தை முடித்த கையோடு மார்க் ஆண்டனி என்ற,

சூப்பர் ஹிட் படத்தை கொடுத்த இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க உள்ள படத்தில் நடிக்க இருக்கிறார் அஜித்.  இப்படி இருக்கும் நிலையில் அஜித்தின் 64வது படத்தை இயக்கப் போவது இவர்தான் என்று தகவல் வெளியாகி உள்ளது.  அவர் வேறு யாருமில்லை இயக்குனர் சிறுத்தை சிவா தான் .

அஜித்- சிறுத்தை சிவா கூட்டணியில் வெளியான வீரம் , வேதாளம் போன்ற இரண்டு திரைப்படங்களும் பிளாக் மாஸ்டர் படமாக அமைந்தது.   ஆனால் அதன் பிறகு இவர்களுடைய கூட்டணியில் வெளியான விவேகம் திரைப்படம் மண்ணை கவ்வியது . இதன் பிறகு மீண்டும் சிவாவுக்கு,

வாய்ப்பு கொடுத்திருந்தார் அஜித்.  அப்படி வெளியான  விஸ்வாசம்  நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.  இப்படி தொடர்ச்சியாக சிவாவுக்கே அஜித் வாய்ப்பு கொடுத்து வந்ததால் இனிமேல் அவருடன் பணிபுரிய வேண்டாம் என்று அஜித் ரசிகர்களே கோரிக்கை வைத்து வந்தனர் .

இப்படி இருக்கும் நிலையில் அஜித்தின் 64வது படத்தை இயக்கப் போவது சிறுத்தை சிவா தான் என்று தகவல் வெளியாகி உள்ளது.  அந்த வகையில் இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறதாம். இதைப் பார்த்த ரசிகர்கள் மீண்டும் அவரா.? வேண்டவே வேண்டாம் என்று கதறி வருகின்றனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *