April 26, 2024

இது நடந் தா ல் தா ன் விஷா லுக் கு திரும ண ம் நடக்கு ம் ..!! வெளி ப்படை யாக சொல் லிய வி ஷா லின் தந் தை ..!! அப் போ இ னி இவ ருக் கு 60 ம் கல் யாண ம் தா ன் ..!!

விஷால் ஒரு பிரபலமான தமிழ் திரைப்பட நடிகர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார்.  கடந்த 2004 ஆம் ஆண்டு வெளியான செல்லமே என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார் நடிகர் விஷால்.  இப்படி வெளியான முதல் திரைப்படமே இவருக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது . பின்னர் இந்த படத்தைத் தொடர்ந்து சண்டக்கோழி, திமிரு, தாமிரபரணி என்று தொடர்ச்சியாக பல சூப்பர் ஹிட் படங்களில்,

நடித்து தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டார் . இப்படி நடிகராக கலக்கி கொண்டு வந்த விஷால் ஒரு கட்டத்தில் தயாரிப்பாளராகவும் அறிமுகமானார் . அப்படி இவரின் நடிப்பில் வெளியான பல திரைப்படங்களை தயாரித்து இருந்த  விஷாலுக்கு சமீப காலமாக வெளியான எந்த ஒரு திரைப்படங்களும் ,

கை கொடுக்கவில்லை.  இதனால் விரைவில் வெளியாக இருக்கும் மார்க் ஆண்டனி படத்தை பெரிய அளவில் நம்பியிருக்கிறார் . இந்நிலையில் 45 வயதாகும் விஷால் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருந்து வருகிறார்.  அது மட்டுமல்லாமல் சில வருடங்களுக்கு முன்பு விஷாலுக்கு நிச்சயதார்த்தம் முடிந்தும்,

திருமணம் நடக்காமல் போனது . இது குறித்து முதல்முறையாக வாய் திறந்து உள்ளார் விஷாலின் அப்பா.  அந்த வகையில் அவர் கூறியதாவது , புதிதாக கட்டப்படும் நடிகர் சங்க கட்டடத்தில் தான்,  தன்னுடைய திருமணம் நடக்க வேண்டும் என்று விஷால் உறுதியாக உள்ளார் என்றும் ,

அதனால்தான் இவருடைய திருமணத்தில் தாமதம் ஏற்பட்டு வருகிறது என்றும் இதனால்தான் அந்த நிச்சயதார்த்தமும் நின்று போனது என்றும் விளக்கம் கொடுத்திருந்தார் . இதைப் பார்த்த ரசிகர்கள் அப்போ இவருக்கு இனி அறுபதாம் கல்யாணம்தான் என்று கூறி வருகின்றனர் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *