May 5, 2024

அப்பாவி போல இருக்கும் இந்த சிறுவன் ..!! தற்போது முரட்டு வில்லன் நடிகரா ..?? சூப்பர் ஸ்டாருக்கும் ஸ்கெட்ச் போட்ட பிரபலம் ..!!

ராணா டகுபதி ஓர் பிரபலமான இந்திய திரைப்பட நடிகர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார் . தெலுங்கு படத்தின் மூலம் தன்னுடைய திரைப்பயணத்தை தொடங்கிய ராணா டகுபதி கடந்த 2013 ஆம் ஆண்டு அஜித் நடிப்பில் வெளியான ஆரம்பம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு நடிகராக அறிமுகமானார் . இருந்தாலும் இவர் ரசிகர்களிடையே பெரிய அளவில் பிரபலமானது ,

பாகுபலி படத்தின் மூலம் தான்.  இந்த படத்தில் பல்வால் தேவன் என்ற வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களையும் மிரட்டி இருந்தார் நடிகர் ராணா டகுபதி. பின்னர் இந்த படத்தை தொடர்ந்து இஞ்சி இடுப்பழகி, பெங்களூரு நாட்கள் ,

என்னை நோக்கி பாயும் தோட்டா,  காடன் போன்ற தமிழ்  படங்களில் நடித்திருந்தார் நடிகர் ராணா டகுபதி.  மேலும் தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழி படங்களிலும் தொடர்ந்து கலக்கிக் கொண்டு வருகிறார் நடிகர் ராணா டகுபதி .

அதோடு தற்போது ஜெய் பீம் பட இயக்குனரான டி ஜே ஞானவேல் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாக உள்ள தலைவர் 170 படத்திலும் நடிக்க உள்ளாராம்  நடிகர் ராணா டகுபதி . இப்படி இருக்கும் நிலையில் நடிகர் ராணா ரகுபதியின் சிறு வயது புகைப்படம்,

ஒன்று இணையத்தை கலக்கி கொண்டு வருகிறது . இதோ அந்த புகைப்படத்தை நீங்களும் பாருங்க …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *