May 2, 2024

படம் ஓடுனாலும் சரி , ஓடலைனாலும் சரி ..!! இத்தனை கோடி சம்பளம் வேண்டும் ..!! தொடர் தோல்வியிலும் சம்பளத்தை குறைக்காத சந்தானம் ..!!

தமிழ் சினிமா உலகில் தவிர்க்க முடியாத காமெடினாக கொடி கட்டி பறந்து வந்து இன்று ஹீரோவாகவும் கலக்கிக்கொண்டு வருகிறார் நடிகர் சந்தானம் . அந்த வகையில்  வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்ற படத்தில் ஹீரோவாக நடித்து ரசிகர்களை கவர்ந்திருந்தார் . பின்னர் காமெடியனாக கலக்கிக்கொண்டு வந்த சந்தானம் இனிமேல் நடித்தால்  ஹீரோவாக மட்டும் தான் நடிப்பேன் என்று முடிவெடுத்தார்.

அப்படி சொல்லிய  பிறகு அவர் நடித்த ஒரு சில படங்கள் நல்ல வரவேற்பை பெற்றாலும்,  அதன் பிறகு இவர் நடித்த படங்கள் எதுவும் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை . இன்னும் சொல்ல போனால் கடந்த ஆண்டு இவருடைய நடிப்பில் வெளியான டிடி ரிட்டன்ஸ் மட்டும்தான் வெற்றி பெற்றது .

மற்றபடி இவருடைய நடிப்பில் வெளியான கிக் ,80ஸ் பில்டப் போன்ற படங்கள் தோல்வியையே சந்தித்தது.  ஆனால் அப்படி இருந்தும் கூட தன்னுடைய சம்பவத்தை ஒரு ரூபாய் குறைக்க வில்லையாம் சந்தானம் . அந்த வகையில் தற்போது ஒரு படத்திற்கு எட்டு கோடி சம்பளம் வாங்கி வருகிறாராம் சந்தானம்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *